CNG Cars விலை இவ்ளோதானா! 30-34 கிமீ மைலேஜ் கிடைக்கும்! பேசாம பைக்கை தூக்கி வீசிட்டு இதை வாங்கீரலாம்!

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்க கூடிய கார்களுக்கு பதிலாக சிஎன்ஜி (CNG) கார்களை தற்போது நிறைய பேர் வாங்க தொடங்கியுள்ளனர். இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருப்பதற்கு 3 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

சிஎன்ஜி விலை (Price) குறைவு என்பதுதான் இதற்கு முதல் காரணம். பெட்ரோல், டீசல் கார்களை விட, சிஎன்ஜி கார்கள் அதிகமான மைலேஜ் (Mileage) வழங்கும் என்பது 2வது காரணம். பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி கார்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவை என்பது 3வது காரணம்.

CNG Pump

இந்த சூழலில் தற்போது சிஎன்ஜி விலை கிடுகிடுவென குறைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில், சிஎன்ஜி விலை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் வரை குறைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். எனவே சிஎன்ஜி கார்களை வாங்குவது பற்றி நிறைய பேர் யோசிக்க தொடங்கியுள்ளனர்.

அவர்களுக்காகவே இந்த செய்தி. இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய 4 முக்கியமான சிஎன்ஜி கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் சிஎன்ஜி கார்களை வாங்குவதாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

Maruti Alto 800 S-Presso Alto K10 Wagon R CNG

மாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி (Maruti Alto 800 CNG): மிகவும் கடுமையான பிஎஸ்6 பேஸ் 2 (BS6 Phase 2) மாசு உமிழ்வு விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. லாபகரமாக இருக்காது என்பதால், இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரின் பெட்ரோல் இன்ஜின் மாடல் அப்டேட் செய்யப்படவில்லை.

எனவே அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் மாருதி சுஸுகி ஆல்டோ 800 சிஎன்ஜி கார் இன்னமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 'ஸ்டாக்' இருக்கும் வரை மட்டுமே, இந்த கார் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி ஆல்டோ 800 சிஎன்ஜி காரின் விலை வெறும் 5.13 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இவ்வளவு விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஆல்டோ 800 சிஎன்ஜி கார், ஒரு கிலோவிற்கு 30 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு சிஎன்ஜி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி (Maruti S-Presso CNG): மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி கார், 6 லட்ச ரூபாய்க்கும் குறைவான எக்ஸ் ஷோரூம் விலையிலேயே கிடைக்கிறது. அதே நேரத்தில் இந்த கார், ஒரு கிலோவிற்கு 32 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

மாருதி ஆல்டோ கே10 சிஎன்ஜி (Maruti Alto K10 CNG): மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி காரின் விலை வெறும் 5.96 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு கிட்டத்தட்ட 34 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன் ஆர் சிஎன்ஜி (Maruti Wagon R CNG): மாருதி சுஸுகி வேகன் ஆர் சிஎன்ஜி காரின் விலை 6.43 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். வேகன் ஆர் சிஎன்ஜி கார், ஒரு கிலோவிற்கு 34 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

கார்களின் விலை குறைவாக இருப்பதுடன், அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் மற்றும் இயக்குவதற்கான செலவும் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த 4 சிஎன்ஜி கார்களும் நல்ல ஆப்ஷனாக இருக்கும். எனவே நீங்கள் இவற்றை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 13, 2023, 17:07 [IST]
English summary
Most affordable cng cars maruti alto 800 s presso alto k10 wagon r
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+