மாருதி சுஸுகி எல்லாம் லிஸ்ட்டிலேயே இல்ல!! உலக மக்கள் பலரது நம்பிக்கையை பெற்ற டாப்-10 கார் நிறுவனங்கள்!
கார் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் பலர் உன்னிப்பாக கவனிக்கக்கூடிய ஒன்று, காரின் நம்பகத்தன்மை ஆகும். காரின் நம்பகத்தன்மையில் எல்லாமே அடங்குகிறது. அதாவது, பயணத்தின்போது இடையூறு இல்லாமல் கார் எவ்வாறு இயங்கும், காரின் பாகங்களில் ஏற்படும் அதிகப்பட்ச வெப்பநிலை என்ன? என ஒரு காரின் மீது நமக்கு நம்பிக்கையை உருவாக்கும் காரணிகள் நம்பகத்தன்மையை தீர்மானிக்கின்றன. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான வாடிக்கையாளர் அறிக்கை டாப் கார் பிராண்ட்களின் பெயர்களுடன் வெளியாகியுள்ளது.
லெக்ஸஸ் (Lexus): 2023ஆம் ஆண்டின் மிகவும் நம்பத்தன்மை கொண்ட கார் பிராண்டாக லெக்ஸஸ் விளங்குகிறது. வாடிக்கையாளர் அறிக்கை 2023-இல் லெக்ஸஸ் நிறுவனத்துக்கு 79 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனது கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை-அற்ற ஓனர்ஷிப்பை வழங்கக்கூடிய கார் நிறுவனமாக லெக்ஸஸ் விளங்குகிறது.

டொயோட்டா (Toyota): லெக்ஸஸின் தாய் நிறுவனமான டொயோட்டாவுக்கு நம்பத்தன்மைக்கான மதிப்பெண்கள் 76ஆக வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற கார்கள் மற்றும் டிரக் வாகனங்களை உருவாக்க டொயோட்டா விரும்புகிறது. இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது.
மினி (MINI): பிஎம்டபிள்யூ குழுமத்தில் அங்கமாக வகிக்கும் ஓர் லக்சரி கார் பிராண்ட். மினி கார்கள் அளவில் சிறியதாக இருக்கும். இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பத்தன்மையை வழங்குபவைகளாக மினி கார்கள் அங்கீக்கரிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் அறிக்கை 2023-இல் மினி கார் நிறுவனத்துக்கு நம்பத்தன்மைக்காக 71 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

அகுரா (Acura): இப்படியொரு கார் பிராண்டை நம்மில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது ஹோண்டாவின் லக்சரி கார்களுக்கான சப்-பிராண்ட் ஆகும். இந்த லக்சரி கார் பிராண்டுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் நம்பத்தன்மைக்கான மதிப்பெண் 70 ஆகும். ஒவ்வொருவரின் டிரைவிங் ஸ்டைலுக்கும் ஏற்ப செயல்திறன்களை வழங்கக்கூடிய கார்களை சிறந்த தரத்தில் உருவாக்குவதே அகுரா நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
ஹோண்டா (Honda): லெக்ஸஸ்- டொயோட்டாவை போன்று, லக்சரி கார் நிறுவனமான அகுராவுக்கு அடுத்து இடத்தில் தாய் நிறுவனமான ஹோண்டா உள்ளது. ஹோண்டாவுக்கும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மைக்கான மதிப்பெண்ணாக 70 வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஹோண்டாவின் முக்கியமான வாகனங்கள் சிறந்த நம்பகத்தன்மையை வழங்குகின்றன.

சுபாரு (Subaru): இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ள சுபாரு நிறுவனத்தின் கஸ்டமர் நம்பகத்தன்மைக்கான மதிப்பெண் 69 ஆகும். சுபாரு நிறுவனம் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட கார்களினால் பிரபலமானவையாக விளங்குகிறது. அத்துடன், இந்த நிறுவனத்தின் வாகனங்கள் செயல்முறைக்கு ஏற்றவைகளாக உள்ளன. அத்துடன், சுபாரு கார்கள் ஆல்-வீல்-டிரைவ் திறனை கொண்டவைகளாக உள்ளன.
மஸ்டா (Mazda): வாடிக்கையாளர்கள் நம்பகத் தன்மையில் 67 மதிப்பெண்களுடன் மஸ்டா 7வது இடத்தை தனதாக்கி உள்ளது. மஸ்டா கார்கள் சிறந்த டிரைவிங் எக்ஸ்ப்ரீயன்ஸை வழங்குவது மட்டுமின்றி, அவற்றின் தோற்றமும் சூப்பர் ஸ்டைலிஷாக இருக்கிறது. இதனை வருங்காலங்களிலும் தொடர மஸ்டா நிறுவனம் விரும்புகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 7 கார் பிராண்ட்களுக்கு அடுத்து 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் போர்ஷே, பிஎம்டபிள்யூ மற்றும் கியா நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் கார்கள் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இல்லை.


Click it and Unblock the Notifications









