10கோடி ரூபாய் கொடுத்து ஒத்த காரை வாங்கிய முகேஷ் அம்பானி! இந்திய ராணுவமே நினைச்சாலும் இந்த காரை அழிக்க முடியாது

வாகனங்களுக்காகப் பணத்தை வாரி இரைப்பவர்களை உலக முழுவதிலும் நம்மால் காண முடிகின்றது. இந்தியாவிலும் இந்த மாதிரியான நபர்கள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு மிகச் சிறந்த சான்றாக அம்பானி குடும்பத்தினர் இருக்கின்றனர். நம்மில் பலர் பத்தாண்டுக்கு ஒரு முறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாகனங்களை மாற்றுபவர்களாக இருக்கின்றோம்.

ஆனால், இந்தச் செல்வம் கொழித்த குடும்பத்தினர் மாசம் அல்லது வாரத்திற்கு ஓர் புதிய வாகனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு வாகனங்கள்மீது தீராத் தாகம் கொண்டவர்களாக முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் இருக்கின்றனர். இதனால்தான் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரின் பெயர் வாகன உலகில் அடிக்கடி அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Mukesh ambani bought mercedes benz s680 guard bulletproof car

இப்போது மீண்டும் முகேஷ் அம்பானியின் பெயர் தலைப்பு செய்தியாக மாறி இருக்கின்றது. அவர், உலகின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 680 குவார்ட் (Mercedes-Benz S680 Guard) செடானை வாங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாகச் சமீபத்தில் அவருடைய குடும்பத்தினர் அந்தக் காரில் வலம் வரும் வீடியோ வெளியாகி இருக்கின்றது. இந்தக் காரின் கொள்முதலே தற்போது அவரின் பெயர் வாகன உலகில் தலைப்பு செய்தியாக மாறக் காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தக் காரின் விலை ரூ. 10 கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படுகின்றது.

இந்த அதீத விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே முகேஷ் அம்பானியின் கொள்முதல் பெரும் பேசு பொருளாகவும் மாறி இருக்கின்றது. இதற்கு அக்காரின் விலை மட்டுமல்ல அது கொண்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் மற்றுமொரு காரணமாக இருக்கின்றது. முகேஷ் அம்பானி தற்போது வாங்கி இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்ட் ஓர் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் கொண்ட காராகும்.

சரமாரியாகச் சுட்டுத் தள்ளும் மெஷிஷன் கன்களின் தாக்கத்தில் இருந்தும்கூட இந்தக் கார் பயணிகளைக் காக்கும். இத்தகைய திறன் கொண்ட காரையே தற்போது முகேஷ் அம்பானி வாங்கி இருக்கின்றார். இந்தக் கார் வெறும் துப்பாக்கிக் குண்டுகளின் தாக்கத்தை மட்டுமே தாங்கும் என நினைத்ததுக் கொள்ள வேண்டாம்.

இதனால் கையெறி குண்டுகளின் தாக்கத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து, தீ விபத்தைத் தவிர்க்கும் வசதியும் இந்தக் காருக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். இதன் காரணத்தினாலும் தொழில் போட்டி காரணத்தினாலும் அவருக்கு அச்சுறுத்தல்கள் மிக அதிகம்.

இதன் காரணத்தினாலேயே மத்திய அரசாங்கத்தின் இசட் பிளஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகின்றது. ஓர் மாநிலத்தின் முதல் அமைச்சருக்கு வழங்கப்படுவதற்கு இணையான பாதுகாப்பு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. இதுபோதாதென்று கூடுதல் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமாகவே முகேஷ் அம்பானி, அதீத பாதுகாப்பு வசதிகள் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி இருக்கின்றார்.

வழக்கமான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டைக் காட்டிலும் அம்பானி வாங்கி இருப்பது அதிக எடைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. 2 டன் வரை எடைக் கொண்டதாகக் அது காட்சியளிக்கின்றது. இதற்கு அக்காரின் உடல் பேனல்கள் அதிக உறுதியானதாகவும், ஸ்ட்ராங்கானதாகவும் வடிவமைக்கப்பட்டு இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

வெடிகுண்டு, துப்பாக்குக் குண்டுகளின் தாங்கங்களைச் சமாளிப்பதற்காகப் பல லேயர் கண்ணாடிகள் மற்றும் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனாலேயே அது மிகவும் அதிக எடைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்தக் காரால் காற்றே இல்லாத சூழலிலும் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகம்வரை பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானி வாங்கி இருக்கும் கார் விஷ வாயு தாக்குதலில் இருந்தும் பயணிகளைப் பாதுகாக்கும். காருக்குள் சுத்தமான காற்றை வழங்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க சொகுசு வசதிகளிலும் இந்தக் கார் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும் வகையிலேயே இருக்கின்றது. இதனால்தான் விலை பத்து கோடிக்கும் அதிகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 24, 2023, 12:44 [IST]
English summary
Mukesh ambani buys 10 crore rupee mercedes benz s680 guard sedan here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+