முகேஷ் அம்பானி வீட்டில் நிறம் மாறும் ரோல்ஸ் ராய்ஸ் காரா? பச்சோந்தியே தோத்திடும்போல! காருல வந்தது அவரு இல்ல!
இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இடத்தில் இல்லாத கார்களே இல்லை என கூறிவிடலாம். அந்த அளவிற்கு அவரிடத்தில் மிக ஏராளமான எண்ணிக்கையில் சொகுசு கார்கள் குவிந்துக் காணப்படுகின்றன. இதனால்தான் இந்திய வாகன உலகம் அவரை மிகப் பெரிய கார் காதலர் என கூறுகின்றது.
அவர் வசித்து வரும் மும்பை 'அன்டிலியா' இல்லத்தில் கார் நிறுத்துவதற்கு என்றே தனி தளம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த தளத்தில் எத்தனை கார்கள் இருக்கின்றன? என்னென்ன கார்கள் இருக்கின்றன? அவற்றின் உண்மை விலை என்ன? என்பது வெளி உலகம் அறிந்திராத ஒன்று.

அதேவேளையில், கடந்த காலத்தில் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் டீம்-க்கு 'ஜியோ கராஜ்'-ஐ பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. முகேஷ் அம்பானியின் கார் கலெக்ஷன் கொண்ட கராஜிக்கே ஜியோ கராஜ் என்று அழைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கராஜில் இருந்து அவ்வப்போது ஒரு சில சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் வெளி உலகிற்குக் கொண்டு வரப்படும்.
அவ்வாறே முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறம் மாறும் திறன் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வெளி உலகிற்குக் கொண்டு வரப்பட்டது. மும்பை சாலையில் அது வலம் வந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கே முகேஷ் அம்பானி இந்த நிறத்தை மாற்றிக் கொள்ளும் வசதியைச் சேர்த்திருக்கின்றார்.

முன் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ஓர் விதமான நிறத்திலும், பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ஓர் நிறத்திலும் இந்த கார் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மட்டுமில்லைங்க அம்பானியிடம் இருக்கும் இன்னும் பல சொகுசு கார்களும் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் இடம் பிடித்திருக்கின்றன.
நிறம் மாறும் திறன் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் பயணித்தது ஈஷா அம்பானி என கூறப்படுகின்றது. ஆனால், வீடியோவில் காருக்குள் யார் பயணித்தது என்பது துள்ளியமாக தெரியவில்லை. அதேவேளையில், முகேஷ் அம்பானி இடத்தில் ஒரே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அவர்களிடத்தில் ஒட்டுமொத்தமாக மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருக்கின்றன. ஒற்றை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலையே ரூ. 6.95 கோடிகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலையே அவர் ஒட்டுமொத்தமாக மூன்று வைத்திருக்கின்றார். இதேபோல், ரோல்ஸ் ராய்ஸின் இன்னும் பல தயாரிப்புகளை அவர் தன் வசம் வைத்திருக்கின்றார்.
அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி போன்ற மாடல்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, பிஎம்டபிள்யூ ஐ8, ஃபெர்ராரி 812 சூப்பர் ஃபாஸ்ட், மேக்லேரன் 520எஸ் ஸ்பைடர், லம்போர்கினி அவென்டேடர் எஸ் ரோட்ஸ்டர், ஃபெர்ராரி போர்டோஃபினோ, அஸ்டன் மார்டின் டிபி11, லம்போர்கினி உருஸ் உள்ளிட்ட அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதுதவிர, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்கள் பலவற்றை முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சில கார்கள் மிக மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்டவை ஆகும். புல்லட், வெடிகுண்டு மற்றும் தீ விபத்து உள்ளிட்டவற்றில் இருந்து காக்கும் திறன் கொண்ட கார்களையும் அம்பானி பயன்படுத்தி வருகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை அரசு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொழிலில் உள்ள போட்டி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசாங்கம் அம்பானிக்கு வழங்குகின்றது. இவற்றுடன் சேர்த்தே தன்னுடையே பாதுகாப்பை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதமாக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரை அவர் பயன்படுத்தி வருகின்றார்.


Click it and Unblock the Notifications









