ஆட்டோமொபைல் துறையில் காலடி வைக்கப்போகும் அம்பானி! கதி கலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்! என்ன ஆகபோகுதோ?

இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க அம்பானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இதற்கான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் எஸ்ஏஐசி, இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் தான் எம்ஜி மோட்டார். எம்ஜி மோட்டார் இந்தியாவின் தன் கால் தடத்தைப் பதித்துச் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது. குறுகிய நாட்களில் இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்ற நிறுவனமாக எம்ஜி நிறுவனம் உள்ளது.

ambani eyes on mg motor

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்நிறுவனம் வெளியிட்ட எம்ஜி கோமெட் இவி எனும் எலெக்ட்ரிக் காரும் பிரபலமாகியுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பு இந்த காரின் மீது எகிறியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த சில ஆண்டுகளில் எம்ஜி நிறுவனம் பெரும் வளர்ச்சியடைவதற்கு பெரும் முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக ரூ5000 கோடி பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த ரூ5000 கோடி முதலீட்டை இந்தியாவின் அதன் பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் இந்தியாவிலிருந்தே பெற முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அதன் விற்பனையை விரிவுபடுத்தவும், தயாரிப்பை எதிர்காலத்தில் அதிகரிக்கவும், பணம் தேவை தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் அவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பில்லை.

ambani eyes on mg motor

இதனால் இந்நிறுவனம் தனது நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை இந்தியாவில் உள்ள பெரும் முதலீட்டாளர்களில் ஒருவருக்கு விற்பனை செய்து அதன் மூலம் முதலீட்டைப் பெற்று தனது விற்பனை மற்றும் ஆலையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. பெரும்பான்மையான பங்கு விற்பனை செய்யப்பட்டால் அந்நிறுவனத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு அந்த பங்கை வாங்கியவர்கள் வருவார்கள். இதனால் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனமாக மாறும்.

இந்நிலையில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க இந்தியாவின் பெரும் முதலீட்டாளர்களான, அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ஹீரோ குழுமம், விப்ரோ நிறுவனத்தின் தலைவரான பிரேம்ஜி, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஆகியோரிடம் பெரும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. எம்ஜி நிறுவனம் இவர்களுடன் பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர். இந்த பேச்சு வார்த்தையில் டிமாண்ட்களை பொருத்து இந்தாண்டு இறுதிக்குள் எம்ஜி நிறுவனத்தின் பெரும் பங்குகளை இந்தியாவில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

ambani eyes on mg motor

இப்படியாக விற்பனை செய்யப்பட்டுப் பெறப்படும் பணத்தைக் கொண்டு எம்ஜிநிறுவனத்தின் கட்டுமானத்தை மேம்படுத்தச் செலவு செய்யலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் ஆலை குஜராத்தில் இருக்கிறது. அங்கு தற்போது ஆண்டிற்கு 1.2 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் அளவிற்குக் கொள்ளளவு இருக்கிறது. இதை 3 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் எம்ஜி நிறுவனத்திற்கே தனியாக பேட்டரி செல்களை தயாரிக்கும் ஆலையை நிறுவவும், 3ம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹைட்ரஜன் ப்யூயல் செல் தொழிற்நுட்பத்தை மேம்படுத்தவும் செலவு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க அடுத்தடுத்து 4-5 கார்களை இந்தியாவில் களம் இறக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் தங்கள் கார்களில் 65-75 சதவீதம் எலெக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என அந்நிறுவனம் விரும்புகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு எகிறி வரும் நிலையில் இந்த முடிவு எம்ஜி நிறுவனத்திற்கு பெரும் பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியர்கள் கையில் எம்ஜி நிறுவனம் சென்றால் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளுக்கு எம்ஜி நிறுவனத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பது மட்டும் உறுதி.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்தியர்களுக்குத் தனது பெரும்பங்கை விற்க முடிவு செய்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது. குறிப்பாக சுஸூகி, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் வைத்த கூட்டு தான் இந்தியாவில் அதன் விற்பனை வளர்ச்சியை எகிற வைத்துள்ளது. இதுமட்டும் நடந்தால் இந்தியாவில் எம்ஜி அசைக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, May 12, 2023, 10:11 [IST]
English summary
Mukesh ambani eyes on mg motor to enter the automobile market
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X