நடிகர் கார்த்திக்கிற்கு அபராதம் விதித்த மும்பை போலீஸ்! ஆடம்பர காருல வந்தா எதும் பண்ண மாட்டாங்கனு நெனப்பு!
பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக் ஆர்யனுக்கு மும்பை நகர போலீஸார் அபராதம் விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தி திரை உலகைச் சேர்ந்த பிரபலமான நடிகர்களில் கார்த்திக் ஆர்யனும் ஒருவர் ஆவார். இவரிடத்தில் எண்ணற்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், அவர் பயன்படுத்தி வரும் மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர கார்களில் ஒன்றாக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இது ஓர் அதிக லக்சூரி அம்சங்கள் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

அதிக வேகத்தில் ஓடும் எஸ்யூவி
இதுமட்டுமில்லைங்க, அதிக வேகத்தில் ஓடும் திறன் கொண்ட எஸ்யூவி ரக காராகவும் இது இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக உருஸ் இருக்கின்றது. இதுமாதிரியான ஓர் காரணத்தினாலேயே அம்பானி போன்ற முன்னணி பணக்காரர்கள் தொடங்கி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் வரை பலரின் மனம் கவர்ந்த வாகனமாக இது லம்போர்கினி உருஸ் மாறி இருக்கின்றது.
சூப்பர் ஸ்டாரின் மகள் பயன்படுத்துறாங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா-வும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய கெத்தான காரை தவறான இடத்தில் நிறுத்திய காரணத்திற்காகவே நடிகர் கார்த்திக் ஆர்யன் தற்போது சிக்கலில் சிக்கி இருக்கின்றார். நாட்டின் முக்கியமான நகர்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காணப்படுகின்றது. தவறான வாகன நிறுத்தம் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இத்தகைய ஓர் செயலையே கார்த்திக் ஆர்யன் செய்திருக்கின்றார்.

சட்டம் அனைவருக்கும் ஒன்று
இந்த நிலையிலேயே சட்டம் அனைவருக்கும் ஒன்று என்பதை நிலை நாட்டும் விதமாக மும்பை நகர போக்குவரத்துக் காவல்துறையினர், நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்த்திக் ஆர்யனுக்கு சொந்தமான லம்போர்கினி உருஸ் காருக்கு அபராத செல்லாணை விதித்து இருக்கின்றனர். பொதுவாக பிரபலங்கள் இதுமாதிரியான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்போது அவர்களுக்கு காவலர்கள் சிலர் விதிவிலக்கு அளிப்பது உண்டு.
யோசிக்கவே இல்ல
ஆனால், மும்பை நகர போலீஸார் சிறிதளவும் யோசிக்காமல் கார்த்திக் ஆர்யனுக்கு அபராதம் விதித்து இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்வுகுறித்த தகவலை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் மும்பை காவல்துறை பதிவிட்டு இருக்கின்றது. ஆனால், அபராத செல்லாண் குறித்த தகவலை அது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்தியாவில் நடிகர்கள் இதுபோன்று போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டிக்கப்படுவது முதல் முறையல்ல.

இதுக்கு முன்னாடியும் சில நடிகர்களை தண்டனைக்கு ஆளாகி இருக்காங்க
ஏற்கனவே, பலர் விதிமீறல்களுக்காக தண்டிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்தவகையில், அண்மையில் ஹைதராபாத் போலீஸார் அண்மையில் அல்லு அர்ஜூனுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்தனர். அல்லு அர்ஜூனுக்கு சொந்தமான ரேஞ்ஜ் ரோவர் காரின் ஜன்னல்களில் அடர் கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அவற்றையும் சம்பவ இடத்திலேய அகற்றி காவலர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேபோல், நாக சைதன்யாவின் டொயோட்டா வெல்ஃபையர் காருக்கும் கடந்த காலங்களில் போக்குவரத்து விதிமீறல் காரணத்திற்காக அபராதம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மலையாள நடிகர்கள் பிரித்வி ராஜ் மற்றும் துல்கர் ஆகியோர் பொதுசாலையில் ரேஸில் ஈடுபட்டதற்காக அபராதம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய சம்பவமாக கார்த்திக் ஆர்யனின் போக்குவரத்து விதிமீறல் நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

போலீஸார் அபராதம் விதித்து இருக்கும் லம்போர்கினி உருஸ் காரின் விலை ரூ. 3 கோடி ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 4.5 கோடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மணிக்கு 305 கிலோ மீட்டர்கள் இயங்கும் திறன் கொண்டதே லம்போர்கினி உருஸ் ஆகும். மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.6 செகண்டுகளிலேயே இந்த கார் எட்டிவிடும். இதேபோல், மணிக்கு 200 கிலோ மீட்டர் எனும் வேகத்தை 12.8 வினாடிகளிலும் உருஸ் எட்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









