இந்த பொருட்கள் எல்லாம் உங்க கார்ல இல்லேன்னா ரொம்ப கஷ்டபடுவீங்க!

கார் வைத்திருக்கும் சில நபர்களுக்கு காரில் சில ஆக்ஸசரீஸ்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற தகவல் தெரியாமல் இருக்கும். அதன் விலையும் குறைவு தான். ஆனால் அதன் பலன் அதிகம். இப்படியான சில முக்கியமான கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸசரீஸ்களை பற்றி காணலாம்.

டபிள்யூடி 40: டபிள்யூடி 40 என்பது பல்வேறு பயன்பாட்டு லுப்ரிகென்ட் இது காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பகுதிகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் லுக்ரிகென்ட் ஆகும். இதைப் பயன்படுத்தினால் வாகனம் துரு பிடிக்காமல் சுத்தமாக இருக்கும். இதன் விலையும் ரூ500க்குள் தான் மிகவும் பயனுள்ள ஆக்ஸசரீஸ் இது.

Must Have Car Accessories

மைக்ரோ ஃபைபர் துணி: மைக்ரோ ஃபைபர் துணி தான் காரை துடைக்கப் பயன்படும் துணி, மற்ற துணிகளைப் பயன்படுத்தினால் கார் ஸ்கிராட்ச் ஆக வாய்ப்ப இருக்கிறது. இதுவே மைக்ரோ ஃபைபர் துணியைப் பயன்படுத்தினால் கார் ஸ்கிராட்ச் ஆகாது. காரையும் அழுக்கில்லாமல் துடைக்கலாம். மேலும் இதைத் துவைத்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். விலையும் குறைவு தான். சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது இது.

ஃபாஸ்ட் சார்ஜர்: இன்றைய உலகில் கேட்ஜெட்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதைப் பயணத்தின் போது சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம். இதனால் விரைவாக சார்ஜ் ஏற்ற காரில் மார்கெட்டில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜர்களை பயன்படுத்தலாம். இதன் விலையும் குறைவு தான்.

Must Have Car Accessories

கார் பெர்ஃப்யூம்: கார்களுக்கு பெர்ஃப்யூம் மிகவும் அவசியம், அது காருக்குள் நல்ல நறுமணத்தை ஏற்படுத்தும். மார்கெட்டில் ஏகப்பட்ட குறைந்த விலை பெர்ஃப்யூம்கள் இருக்கிறது. பல்வேறு விதமான வாசனைகளில் பெர்ஃப்யூம்கள் இருக்கிறது.

குப்பைத் தொட்டி: கார்களில் பயணிக்கும் போது நம்மிடம் உணவருந்துவது, உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்யும் பழக்கம் இருக்கிறது.இதனால் குப்பைகள் அதிகமாகும். பலர் குப்பைகளை காரின் ஃப்ளோர்களிலேயே போட்டு வருகின்றனர். இதற்குச் சிறிய குப்பைத் தொட்டி மார்கெட்டில் இருக்கிறது. இதை கார்களில் பயன்படுத்தினால் குப்பைகளை அதில் போட்டு தேவையான நேரங்களில் சுத்தம் செய்யவும் சுலபமாக இருக்கும்.

Must Have Car Accessories

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆக்ஸசரீஸ்கள் எல்லாம் குறைந்த விலையில் அதாவது ரூ500க்கும் குறைவான விலையில் மார்கெட்டில் விற்பனையாகும் பொருட்கள் தான். இதன் விலை சிறியதாக இருந்தாலும், இதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 6, 2023, 22:00 [IST]
English summary
Must have car accessories under 500 all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X