பார்க்க தான் சைஸில் சின்னதா இருக்கும்!! ஒருமுறை சார்ஜ் போட்டால் 400கிமீ போகும்!

நம்மி 01 (Nammi 01) எலக்ட்ரிக் கார் சீனாவில் நடைபெற்றுவரும் குவான்ஸூ ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த எலக்ட்ரிக் கார் டோங்ஃபெங் என்ற சீன நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் குறித்த குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடுகளுள் முதன்மையானது சீனா ஆகும். சீனாவில் தற்சமயம் 21வது குவான்ஸூ ஆட்டோ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், டோங்ஃபெங் நிறுவனம் சார்பில் நம்மி 01 என்ற எலக்ட்ரிக் கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த எலக்ட்ரிக் காருக்கான விற்பனை சீனாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளது.

nammi 01 electric car unveiled

சீனாவில் இந்த எலக்ட்ரிக் காரின் விலை 79,800 யுவானில் இருந்து 109,800 யுவானாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.9.46 லட்சத்தில் இருந்து ரூ.13.02 லட்சம் வரையில் மட்டுமே ஆகும். நம்மி 01 போன்ற எலக்ட்ரிக் கார்கள் மூலமாக டோங்ஃபெங் நிறுவனம் சீனாவில் அதன் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகரித்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது.

டோங்ஃபெங் நம்மி 01 எலக்ட்ரிக் வாகனத்தின் சிறப்பம்சமே அதன் காம்பெக்ட்டான உடலமைப்பு தான். மூடப்பட்ட க்ரில், முக்கோண ஹெட்லேம்ப்கள், எல்இடி ஸ்ட்ரிப் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட நேர்த்தியான எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் உள்ளன. அதேபோல், அலை போன்ற டிசைனில் பாகங்களை கொண்ட மெஷ்-டைப் ஏர்டேம்-ஐ இந்த காரின் முன்பக்கத்தில் பார்க்க முடிகிறது.

nammi 01 electric car unveiled

காரின் சைடில் முன்பக்கத்தில் இருந்து பின்பகுதி வரையில் ஓர் மெல்லிய கேரக்டர் லைன் செல்கிறது. பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளுடன் டர்ன் சிக்னல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள், வட்ட வடிவில் வீல் ஆர்ச்கள், கருப்பு நிறத்தில் பில்லர்கள் மற்றும் ஸ்போர்டியான அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை நம்மி 01 எலக்ட்ரிக் காரின் வெளிப்பக்க சிறப்பம்சங்கள் ஆகும்.

இந்த எலக்ட்ரிக் கார் சீனாவில் பர்பிள் மற்றும் பளிச்சிடும் மஞ்சள் பச்சை நிற பெயிண்ட் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கு உள்ளே டேஸ்போர்டு பகுதி மிகவும் அளவில் சிறியதாக வழங்கப்பட்டு உள்ளது. டேஸ்போர்டிலும், செண்டர் கன்சோல் பகுதியிலும் மிகவும் சில பொத்தான்கள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன.

nammi 01 electric car unveiled

ஏனெனில், பொத்தான்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மூலமாக செயல்படுத்தக்கூடிய வகையில் டோங்ஃபெங் நிறுவனம வடிவமைத்து உள்ளது. க்ளோவ் பாக்ஸ் ஆனது ட்ராயர் டைப்பில் உள்ளது.

2வது இருக்கை வரிசையை மடக்கினால், பொருட்களை வைத்துக் கொள்வதற்கு 945 லிட்டர்களில் இடவசதியை இந்த எலக்ட்ரிக் கார் வழங்குகிறது. டோங்ஃபெங் நிறுவனத்தின் எஸ்3 பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் வாகனமான நம்மி 01 எலக்ட்ரிக் காரில் 31.45kWh பேட்டரி தொகுப்பும், அதிகப்பட்சமாக 42.3 கிலோ வாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டு உள்ளது.

nammi 01 electric car unveiled

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், சீன தயாரிப்புகளை நம் மத்திய அரசு முற்றிலுமாக தவிர்க்கிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் டோங்ஃபெங் நிறுவனம் தொழிற்சாலையை நிறுவ வாய்ப்பே இல்லை என்றுகூட சொல்லலாம். ஆனால், நம்மி 01 எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு அசத்தலாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 11:44 [IST]
English summary
Nammi 01 electric car unveiled in china check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X