நானோ இவ்ளோ ஸ்ட்ராங்கான காரா.. தார் காரையே கரப்பான் பூச்சு போல கவுத்து போட்டிருக்கு! வீடியோ!..
நானோ கார் இவ்ளோ ஸ்ட்ராங்கனாதா என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஓர் சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றது. அது அதைவிட கம்பீரமான தோற்றம் மற்றும் பெரிய உருவம் கொண்ட மஹிந்திரா தார் காரை ஒரே மோதலில் கவிழ்த்தி இருக்கின்றது. இந்த ஷாக்களிக்கும் சம்பவம் பற்றி முழு விபரத்தை பார்க்கலாம், வாங்க.
ஒரு லட்ச ரூபாய்க்கு கார் எனும் திட்டத்தின்கீழ் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்த மிக மிக மலிவு விலை கார் மாடலே நானோ. ரத்தன் டாடாவின் கனவு வாகனம் என்றும் இதனைக் கூறலாம். அனைவருக்குமான கார் எனும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த காரை அவர் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தார். அதாவது, ஏழைகளுக்கும் சென்று சேரும் வகையில் இந்த காரை டாடா விற்பனைக்குக் கொண்டு வந்தது.

நகைத்தவர்கள் வாய் எல்லாம் அடைக்கப்பட்ட தருணம்
தங்களுடைய நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ரத்தன் டாடா அறிவித்தபோது, உலகமே அவரை வியப்பாக பார்த்தது. சில வாகன உற்பத்தியாளர்கள் அவரை கிண்டலடிக்க தவறவில்லை. ஆனால், ரத்தன் டாடாவோ அதை பெரிதும் பொருட்படுத்திக் கொள்ளாமல் நானோவை விற்பனைக்குக் கொண்டு வந்து நகைத்தவர்கள் அனைவரின் வாயையும் அடைத்தார். இத்தகைய மிகப் பெரிய வரலாற்றைக் கொண்ட வாகனமாக டாடா நானோ இருக்கின்றது.
ஆனா போதுமான வரவேற்பு கிடைக்கல
ஆனால், இதற்கு இந்தியர்கள் போதுமான அளவு வரவேற்பு வழங்கவில்லை. இந்த நிலையாலும், இந்தியாவின் புதிய பாதுகாப்பு விதிகள் காரணத்தினாலும் டாடா மோட்டார்ஸ் விருப்பமே இன்றி நானோவை வெளியேற்றும் சூழலை ஏற்படுத்தியது. ஆகையால், இப்போதைக்கு இந்த கார் விற்பனையில் இல்லாத நிலை தென்படுகின்றது. அதேவேளையில், இப்போதும் இந்த காரை நாட்டில் பயன்படுத்துபவர்கள் பலர் உள்ளனர்.

கரப்பான் பூச்சு போல கவுந்திருச்சு
அந்தவகையில், ஓர் டாடா நானோ காரே தன்னைவிட உருவத்திலும், தோற்றத்திலும் பலமடங்கு கம்பீரமான மஹிந்திரா தார் காரை கரப்பான் பூச்சி போல் ஒரே மோதலில் கவிழ்த்திருக்கின்றது. எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்து சம்பவத்தின்போதே இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. மஹிந்திரா தார் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கிற நிலையில், டாடா நானோ காரோ கம்பீரமாக நிற்பதை நம்மால் காண முடிகின்றது.
எங்கு நடைபெற்றது?
அதேவேளையில், நானோவின் முன் பகுதியில் சற்று கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. சத்திஸ்கர் மாநிலம், துர்க் பகுதியிலேயே இந்த விநோத விபத்து அரங்கேறி இருக்கின்றது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதன்படி, மஹிந்திரா தார் மிக வேகமாக வந்ததே இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணம் என்பது தெரிய வந்திருக்கின்றது. தார், மிக வேகமாக வந்து திரும்ப முயன்றிருக்கின்றது.

கட்டுப்பாட்டை இழந்த தார்
அந்தவேளையில், டாடா நானோவும் குறுக்கே வரவே, தார் கட்டுப்பாட்டை இழந்து நானோ மீது மோதி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதி-வேகம் காரணமாக தார் கார் குப்புற கவிழ்ந்து இருக்கின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக தார் காருக்குள் பயணித்த பயணிகள் சிறு சிறு காயங்களுடன் தப்பித்திருக்கின்றனர்.
கம்பீரமாக நின்ற நானோ
நானோவில் இருந்தவர்கள் அந்த கார் கம்பீரமாக நிற்பதைப் போல அவர்களும் கெத்தாக இறங்கி வந்திருக்கின்றனர். இந்த நிலையை வைத்து தார் எஸ்யூவி கார் மிகவும் தரம் குறைவானது என எண்ணி விட வேண்டும். அதிக உறுதியான கட்டுமானத்தைக் கொண்டதே தார் எஸ்யூவி ஆகும். பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளபட்ட மோதல் ஆய்வில்கூட இந்த கார் மிக சிறந்த ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.
பாதுகாப்பான கார் தார்
ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அது குளோபல் என்சிஏபி இடம் இருந்து பெற்றிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்தகைய தரம்மிக்க காரே விபத்தில் தலை குப்புற கவிழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க செய்திருக்கின்றது.
தார் காரின் இந்த நிலைக்கு அதிக வேகம் மற்றும் வந்த வேகத்திலேயே திரும்ப முயன்றதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த காரணத்திற்காகவே அதிக வேகத்தை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்படுகின்றது. எதிர்பாராத நிகழ்வுகளை எல்லாம் அதி வேகம் ஏற்படுத்தும் என்பதற்கான சான்றாகவே இந்த விபத்து சம்பவம் அமைந்திருக்கின்றது. அதாவது, எப்பேர்பட்ட பாதுகாப்பான வாகனமாக இருந்தாலும் அதீத வேகம் உருக்குலைத்துவிடும் என்பதற்கான சான்றாக இந்த நிகழ்வு அமைந்து உள்ளது.


Click it and Unblock the Notifications









