3 கோடி ரூபா கொடுத்து கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... இது காரா? இல்ல கப்பலா?..
பிரபல நடிகர் ஒருவரின் அம்மா தனது சொந்த பயன்பாட்டிற்காக மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே பல விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் அவர்களிடத்தில் இருக்கும்நிலையில் புதிதாக ஒன்றை வாங்குவதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவலைக் காணலாம்.
இந்தியாவில் விற்கப்படும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600)-ம் ஒன்று. இந்த காரையே இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரின் அம்மா வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிபியூ வாயிலாக விற்பனைச் செய்யப்படும் இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இன்னும் பல லட்சங்கள் அல்லது கோடிகள் சேர்க்கப்பட்ட நிலையிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே முன்னணி நட்சத்திர நடிகரின் அம்மா வாங்கி இருக்கின்றார். இந்தி திரை உலகின் பிரபலமான நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர் ஆவார். இவரின் அம்மா நீது சிங்கே தனது சொந்த பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரை வாங்கியவர் ஆவார்.

இந்த காருக்கு இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டிலேயே இந்த காரை முதல் முறையாக மெர்சிடிஸ் விற்பனைக்குக் கொண்டு வந்தது. கொண்டு வரப்பட்ட சில தினங்களிலேயே விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன.
இந்த அளவு அமோக விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 ஆகும். இது கபூர் குடும்பத்தினர் வாங்கும் முதல் மேபேக் சொகுசு கார் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களிடத்தில் இன்னும் சில மெர்சிடிஸ் கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

குறிப்பாக, ரன்பீர் கபூர் இடத்தில் ஏற்கனவே ஓர் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes AMG G63) எஸ்யூவி ரக சொகுசு வாகனம் பயன்பாட்டில் இருக்கின்றது. பாதுகாப்பு மற்றும் லக்சூரி அம்சங்கள் மிக மிக தாராளம் இந்த காரில் என்பதனால் இதனை நடிகரின் குடும்பத்தினர் வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கின்றனர்.
சேம்பைன் பாட்டிலை குளிர்ச்சியாக வைத்திருப்பதான சிறிய ஃப்ரிட்ஜ், எலெக்ட்ரானிக் பனோரமிக் ஸ்லைடிங் சன் ரூஃப், வெண்டிலேட் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட இருக்கை என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தக் கூடிய தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது.

ஆக்டீவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் டிஸ்ட்ரானிக் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஆக்டீவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டீவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டீவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டீவ் ஸ்டியரிங் அசிஸ்ட் என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் மெர்சிடிஸ் அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றது.
இதுமட்டுமின்றி, அடாப்டீவ் ஹை பீம் அசிஸ்ட், 8 ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் டிராஃபிக் கன்ட்ரோல் சிஸ்டம், டவுன்ஹில் ஸ்பீடு ரெகுலேசன், கார் வாஷ் மோட், ஏபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இத்தகைய தரமான சூப்பர் லக்சூரி எஸ்யூவி காரையே ரன்பீர் கபூரின் அம்மா வாங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









