கார் வாங்குறதா இருந்தா இந்த ஜனவரிக்குள்ள வாங்கிடுங்க! 2024ல் பணக்காரர்களால மட்டும்தான் கார வாங்க முடியும் போல!

இந்தியர்கள் பலர் பண்டிகைக் காலத்தில் புதிய பொருட்களை வாங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனால்தான் பண்டிகைக் காலத்தில் அதிக சிறப்பு சலுகைகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாரி வழங்குகின்றன. புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கம் ஆகும். இதன் அடிப்படையிலேயே சலுகைகளை அவை அள்ளிவிடுகின்றன.

இதற்கேற்ப வழக்கமான நாட்களைக் காட்டிலும் பண்டிகைக் காலத்தில் அதிக அளவில் புதிய வாகனங்கள் நாட்டில் விற்பனையாகின்றன. குறிப்பாக, இந்தியாவில் நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்களின் விற்பனை உச்சத்தில் இருக்கும். இதற்கு சான்றாக 2023 ஆம் ஆண்டு அமைந்திருக்கின்றது.

Car prices

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் அதிக எண்ணிக்கையி்ல வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, வெறும் 42 நாட்களில் மட்டும் 37,93,584 யூனிட்டு புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இது சென்ற ஆண்டின் இதே பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை இதுவாகும். சென்ற ஆண்டு இதே பண்டிகைக் காலத்தில் 31,95,213 யூனிட்டுகள் மட்டுமே புதிய வாகனங்கள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான பண்டிகைக் காலத்தை தவறவிட்டவர்கள், புத்தாண்டை புதிய வாகனங்களை வாங்க தேர்வு செய்வார்கள்.

Car prices to rise soon

இத்தகையோருக்கு ஆப்பு வைக்கக் கூடிய தகவலே சமீப காலமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது. வரும் 2024 ஆம் ஆண்டில் புதிய வாகனத்தை வாங்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல வரும் ஜனவரியில் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த தகவல் வரும் புத்தாண்டை புதிய வாகனத்துடன் கொண்டாடலாம் என எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இதனால்தான், வாகன ஆர்வலர்கள், புதிய வாகனம் வாங்கும் பிளான் இருந்தால் ஜனவரிக்கு முன்னதாகவே வாங்கிக் கொள்ள அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Tata punch

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஆடி மற்றும் மெர்சிடிஸ் உள்ளிட்டவையே புத்தாண்டு பரிசாக விலை உயர்வை ஜனவரியில் வழங்க இருப்பதாக தற்போது அறிவித்துக் இருக்கின்றன. மிக முக்கியமாக டாடா, மாருதி மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் விலை உயர்வு செய்ய இருப்பதாக அறிவித்து இருப்பது இந்தியர்கள் பலருக்கு ஷாக்களிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது.

வாகன கட்டுமானப் பொருட்களின் தொடர் விலை உயர்வே இந்த விலை உயர்விற்கு காரணம் என அனைத்து நிறுவனங்களும் அறிவித்து உள்ளன. ஆகையால், பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் இன்னும் சில நிறுவனங்களும் இணைந்து வரும் ஜனவரியில் விலை உயர்வைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், விலை உயர்வானது மிக லேசாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. அதாவது, தற்போது விற்பனைச் செய்யப்படும் விலையைக் காட்டிலும் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் அதிக விலையில் அந்த உயர்வு இருக்கும் என கூறப்படுகின்றது. சில நிறுவனங்கள் நாம் கூறியதைவிட அதிக சதவீதம் விலை உயர்வைக்கூட செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலை உயர்வில் இருந்து வாகன உற்பத்தியாளர்கள் தப்பிக்க வரும் 2024 ஜனவரிக்கு முன்னதாகவே புதிய வாகனங்களை வாங்குவதே சிறந்த யுக்தியாக இருக்கும். அதேநேரத்தில், 2023 மாடல்களை வாடிக்கையாளர்களிடம் தள்ளிவிட வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவிப்பர். இதனை பயன்படுத்துவதனால் கூடுதல் பலன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது, இப்போது உள்ள விலையைக் காட்டிலும் லேசான சலுகை விலையில் வாகனத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 30, 2023, 22:46 [IST]
English summary
New car price to rise from january
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X