மாருதிக்கு அடுத்த தலைவலியை கொடுத்த மஹிந்திரா! தார் 5 டோரில் இதெல்லாம் இப்ப சேக்க போறாங்க!
மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷனை 2024 ஆம் ஆண்டு வெளியிடப் போவதாக தெரிகிறது. இந்த கார் குறித்து ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைத்திருந்தாலும், தற்போது புதிதாக சில தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா தார் கார் இந்தியாவில் பிரபலமான எஸ்யூவி காராக இருக்கிறது. இதன் விற்பனையும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாக உள்ளது. இந்த கார் அறிமுகமாகி சுமார் 3ஆண்டுகள் வரை ஆகிவிட்டது, இருந்தாலும் இந்த காருக்கான மவுசு மக்கள் மத்தியில் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த தார் காரின் 5டோர் வெர்ஷனை அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் காலண்டர் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த காரை இந்தியாவில் பல இடங்களில் மஹிந்திரா நிறுவனம் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதன் மூலமே நமக்கு ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்த காரின் ஸ்பை புகைப்படத்தில் புதிதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த புதிய மஹிந்திரா 5 டோர் தார் கார் தற்போது இந்தியாவில் அதன் டிசைன் உட்பட இதன் முக்கிய அம்சங்கள் வெளியில் தெரியாதபடி மூடப்பட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதன் 3 டோர் வெர்ஷன் காரிலிருந்து சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது.

தற்போது மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் பாடி பேனலை முழுமையாக ஃபினிஷ் செய்த பாடி பேனலாக புரோடெக்ஷனுக்கு தயாரான பாடி பேனலாக உருவாக்கியுள்ளது. இது தற்போது சோதனையில் உள்ள தார் 5 டோர் வெர்ஷன் காரின் ஸ்பை புகைப்படங்களில் நமக்கு தெளிவாக தெரிகிறது. இதற்கு முன்னர் டெஸ்ட் செய்யப்பட்ட இந்த தார் 5டோர் கார் வெர்ஷனில் இந்த அம்சங்கள் இடம் பெறவில்லை.
மஹிந்திரா நிறுவனம் இந்த தார் 5 டோர் காரின் சில முக்கியமான டிசைன் அம்சங்களை சேர்த்துள்ளது. முக்கியமாக இதன் முன் பக்க கிரில்லை மறுவடிவமைப்பு செய்துள்ளது. இதன் மேல் பகுதியில் நீளமான பேட்டர்ன் கொண்ட டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் எல்இடி ஹெட்லைட்,
டிஆர்எல் அதனுடன் கூடிய ஃபாக் லேம்ப் இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. அத்தனையும் எல்இடி லைட்டால் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்இடி ஹெட்லைட் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அம்சமாக இருந்தது. தற்போது அதை மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரில் சேர்த்துள்ளது.
இந்த காரின் பின்பகுதியில் அதே பழைய செவ்வக வடிவிலான டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள பேட்டன் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதே போல இந்த காரின் அலாய் வீல் டிசைனும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது முந்தைய டிசைனை ஓரளவுக்கு ஒத்து இருக்கும் படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள்: மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரில் புதிதாக 10 இன்ச் இன்போடைமென்ட் சிஸ்டம் வழங்கி உள்ளது. மேலும் புதிய ஸ்டியரிங் வீல் ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 காரில் உள்ளதை போல வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க சீட்டுக்கும் பின் பக்க சீட்டிற்கும் ஆம் ரெஸ்டுகள் மற்றும் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் டேஷ்கேம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனால் இது பெரும்பாலும் காருடன் விற்பனைக்கு வராது என தெரிகிறது. கார் வாங்கிய பின்பு இது தனியாக வாங்கி பொருத்த வேண்டிய நிலையில் தான் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரின் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் கியர் பாக்ஸை பொருத்தவரை ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேரியன்ட்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்த கார் வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டில் தற்போது மாருதி நிறுவனத்தின் ஜிம்னி 5 டோர் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில், அந்த காருக்கு போட்டியாக இந்த தார் 5 டோர் கார் அறிமுகமாகும் .
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தார் 500 கார் ஒரு ஆப்-ரோடு லைப் ஸ்டைல் எஸ்யூவி காராக விற்பனையாகிறது. இந்த ரக காருக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. பலர் இந்த காரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாருதி நிறுவனத்திற்கு இந்த தார் 5டோர் கார் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications









