சம்பவத்திற்கு தயாரான ஹூண்டாய்! இந்த காருக்காகதான் ரொம்ப நாளா வெயிட்டிங்! வெளியான தகவலால் உற்சாகம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna). இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், வெர்னா செடான் காரின் புதிய தலைமுறை மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா செடான் கார் அடுத்த மாதம் (மார்ச் 21ம் தேதி) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலைகளை அறிவிப்பதற்கு முன்னதாக, புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதற்கிடையே புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் மாதமே புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அதன் டெலிவரி பணிகள் வரும் வரும் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்துதான் தொடங்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இதற்கும் இன்னும் குறுகிய காலமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. EX, S, SX மற்றும் SX (O) என மொத்தம் 4 வேரியண்ட்களில் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் கிடைக்கும். இந்த காரில் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் ட்யூயல் ஸ்க்ரீன் செட்-அப் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் ஒரு திரையானது, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாக இருக்கும். அதே சமயம் மற்றொரு திரையானது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும்.
இதுதவிர தற்போது கார்களில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் மற்றொரு மிக முக்கியமான வசதியும் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அடாஸ் தொழில்நுட்ப வசதி ஆகும். இதன் மூலம் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார், பயணிகளுக்கு மிகவும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில் டீசல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கு பதிலாக புத்தம் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஐவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். ஏராளமான வசதிகள் மற்றும் சிறப்பான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட காரணங்களால் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications