காலரை தூக்கி விடுங்க! புதிய வரலாறு படைக்க போகும் நம்ம சென்னை! எல்லா நாடுகளுக்கும் இங்கதான் தயார் ஆகுதா!
அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna). இதன் புதிய தலைமுறை (New-gen) மாடலை, ஹூண்டாய் நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
2023 ஹூண்டாய் வெர்னா காரின் உள்ளே ட்யூயல் ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று 10.25 இன்ச் ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 65க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகளுடன் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 8 ஸ்பீக்கர் பாஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளும் (Features), புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS), 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ் என ஏராளமான வசதிகளை 2023 ஹூண்டாய் வெர்னா கார் பெற்றுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே (RDE - Real Driving Emissions) விதிமுறைகளுக்கு இணக்கமானவை ஆகும்.
ஆனால் இந்த காரில் டீசல் இன்ஜின் (Diesel) ஆப்ஷன் கிடையாது. 2023 ஹூண்டாய் வெர்னா காரின் ஆரம்ப விலை (Price) 10.89 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.38 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இந்திய சந்தையில் தற்போது புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா செடான் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து 2023 ஹூண்டாய் வெர்னா காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யும் பணிகளும் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளன.
அனேகமாக வரும் ஜூன் மாதத்தில் இருந்து, 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் வெர்னா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுக்கான ஹூண்டாய் வெர்னா காரின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இந்தியா செயல்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து 2023 ஹூண்டாய் வெர்னா கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையில் (Chennai) இயங்கி வருகிறது. இங்குதான் 2023 ஹூண்டாய் வெர்னா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
நடப்பு 2023ம் வருடத்தில் மட்டும், 1.20 லட்சம் புதிய தலைமுறை வெர்னா கார்களை உற்பத்தி செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், சுமார் 80 ஆயிரம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஹூண்டாய் வெர்னா கார்கள், உலகின் பல்வேறு நாடுகளின் சாலைகளிலும் ஓடவிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான். மேக் இன் இந்தியா (Make In India) திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், ஹூண்டாய் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு நிறுவனங்களும், இந்தியாவை பல்வேறு கார்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications