40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் கார் இவ்ளோ சீக்கிரமா வரப்போகுதா! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணமே மைலேஜ்தான் (Mileage). தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்படுகிறது.

Maruti Suzuki Swift

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88.5 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் புதிய தலைமுறை மாடலிலும் அப்படியே வழங்கப்படலாம்.

இதுதவிர புதிய பெட்ரோல்-ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 35 அல்லது 40 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Maruti Suzuki Swift Rear Profile

ஒரு கார் லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர்கள் மைலேஜ் தருவது என்பதெல்லாம் உண்மையிலேயே சாதாரண விஷயமல்ல. எனவேதான் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் வரும் அக்டோபர் மாதம் உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஜப்பான் சந்தையில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதை தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும். அனேகமாக 2024ம் ஆண்டின் முதல் பாதியில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

சுஸுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் (Heartect) பிளாட்பார்ம்மின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் அடிப்படையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எடை குறைவானதாக இருந்தாலும், சிறப்பான பாதுகாப்பை வழங்கும் என கூறப்படுகிறது. அத்துடன் சிறப்பான ஓட்டுதல் அனுபவமும் கிடைக்கும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருந்தால், விற்பனையில் நிச்சயம் புதிய வரலாறு படைக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது டூவீலர்களுக்கு இணையான மைலேஜ் என்பதால், உங்களை போலவே நாங்களும் இந்த காருக்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 23:30 [IST]
English summary
New gen maruti swift to debut in october 2023 full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+