தாறுமாறா மைலேஜ் குடுக்கும் டொயோட்டா கார்! படத்தை போட்டு ஹைப் ஏத்தீ விட்டுட்டாங்க! அடுத்த மாசம் சம்பவம் இருக்கு

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா கேம்ரி (Toyota Camry). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

கடந்த 1982ம் ஆண்டில் இருந்து டொயோட்டா கேம்ரி கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதாவது இந்த காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 41 வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்படுவதால், டொயோட்டா கேம்ரி காருக்கு இன்னும் மவுசு குறையவில்லை.

New-gen Toyota Camry Teased

இந்த வரிசையில் டொயோட்டா கேம்ரி காரின் புதிய தலைமுறை மாடல் (New Generation) தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அனேகமாக நடப்பு ஆண்டு இறுதிக்குள் டொயோட்டா கேம்ரி காரின் புதிய தலைமுறை மாடல் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு (Unveil) கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் தேதி? இன்னும் நமக்கு தெரியவில்லை. இருப்பினும் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ (Los Angeles Auto Show) திருவிழாவில், புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரின் அதிகாரப்பூர்வமான டீசர் புகைப்படத்தை (Teaser Image) டொயோட்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரின் முன் பகுதியை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் டீசர் என்பதால், இது நிழல் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரில், புதிய எல்இடி சிக்னேச்சர் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. TNGA-K பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய மாடல் கட்டமைக்கப்படவுள்ளதாக தகவவ்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சர்வதேச சந்தைகளில் கிடைக்க கூடிய டொயோட்டா க்ரவுன் (Toyota Crown) காரின் டிசைன் அம்சங்களை இந்த காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா க்ரவுன் கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. செயல்திறனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 236 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஒன்றாகும்.

அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய இந்த ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன், டாப் வேரியண்ட்களில் வழங்கப்படலாம். அதே நேரத்தில் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் 203 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர 265 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய 2.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உங்களை போலவே நாங்களும் புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரின் அறிமுகத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளோம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா கேம்ரி கார் 46.17 லட்ச ரூபாய் என்ற விலையில் (Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2023, 22:32 [IST]
English summary
New gen toyota camry teased all details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+