மைலேஜை வாரி வழங்கும் காரை அறிமுகம் செய்தது டொயோட்டா! இதுக்காகதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வெயிட்டிங்!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா கேம்ரி (Toyota Camry). மிட்-சைஸ் செடான் (Mid-size Sedan) ரகத்தை சேர்ந்த இந்த கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகமான, வசதியான மற்றும் திறமையான வாகனம் என்ற நற்பெயரை எடுத்துள்ளது.

இந்த நற்பெயரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், டொயோட்டா கேம்ரி காரின் புதிய தலைமுறை (New Generation) மாடலை, டொயோட்டா நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Toyota Camry Hybrid

டிசைன்: புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரின் டிசைனில் (Design) பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் புதிய ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்கள் (பகல் நேர விளக்குகள்), புதிய டிஃபியூசர்கள் மற்றும் புதிய டெயில்லேம்ப் க்ளஸ்டர்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த டிசைன் அப்டேட்கள், புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காருக்கு மிகவும் உறுதியான மற்றும் அதிநவீன தோற்றத்தை வழங்குகின்றன.

வசதிகள்: புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதே அளவுடைய, அதாவது 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

Toyota Camry Hybrid Dashboard

இதுதவிர இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அதிகம் எதிர்பார்க்கும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும், புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், லேன் சேஞ்ச் அஸிஸ்ட், 360 டிகிரி மானிட்டர், எமர்ஜென்ஸி பிரேக்கிங் உடன் பார்க்கிங் அஸிஸ்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மைலேஜை வாரி வழங்கும் இன்ஜின்: புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி காரில், 2.5 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் (Hybrid Engine) வழங்கப்பட்டுள்ளது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில், இந்த இன்ஜின் கிடைக்கும். இவற்றின் பவர் அவுட்புட் முறையே 225 பிஹெச்பி மற்றும் 232 பிஹெச்பி ஆகும்.

Toyota Camry Hybrid Rear Profile

இது ஹைப்ரிட் இன்ஜின் என்பதால், சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும் என நாம் உறுதியாக நம்பலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா கேம்ரி கார், 46.17 லட்ச ரூபாய் என்ற விலையில் (Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதைக்காட்டிலும் சற்று கூடுதலான விலையில் புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் 2024ம் ஆண்டின் ஏதாவது ஒரு சமயத்தில், புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின், டொயோட்டா கேம்ரி காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 17:10 [IST]
English summary
New gen toyota camry unveiled expected price mileage design features
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X