மீண்டும் விற்பனைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர்! அதிகாரப்பூர்வமா உறுதி பண்ணீட்டாங்க!

இந்திய சந்தையில் மூன்று புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதை ரெனால்ட்-நிஸான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) ஒன்றாகும். இதுதவிர ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில், நிஸான் நிறுவனம் புதிய 7 சீட்டர் எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த வரிசையில் மூன்றாவதாக மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் ஒன்றும் விற்பனைக்கு வரவுள்ளது. தனது எதிர்கால தயாரிப்புகளுக்காக ரெனால்ட்-நிஸான் நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இதில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் (மூன்றாவது தலைமுறை) வரும் 2024-2025ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விற்பனைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர்! அதிகாரப்பூர்வமா உறுதி பண்ணீட்டாங்க!

CMF-B மாடுலர் பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் உருவாக்கப்படவுள்ளது. நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாசியா பிக்ஸ்டர் கான்செப்ட் போலவே, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டிசைன் இருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது வெளியாகி வரும் தகவல்கள் உண்மையென்றால், ஏற்கனவே விற்பனையில் இருந்த ரெனால்ட் டஸ்டர் காரை காட்டிலும், புதிய தலைமுறை மாடல் பெரியதாகவும், விசாலமானதாகவும் இருக்கும்.

வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம். செயல்திறனை பொறுத்தவரையில் 48V ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 130 பிஹெச்பி-யாக இருக்கலாம். இதுதவிர 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

மீண்டும் விற்பனைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர்! அதிகாரப்பூர்வமா உறுதி பண்ணீட்டாங்க!

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களுடன், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் போட்டியிடும்.

இந்தியாவில் தற்போது ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனையில் இல்லை. ஏற்கனவே அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழலில் ரெனால்ட் டஸ்டர் கார் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பது, அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 22:16 [IST]
English summary
New generation renault duster india launch officially confirmed know all the details here
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+