40 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்! மாருதி ஷோரூம்களுக்கு சார சாரயா படையெடுக்கும் மக்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் புதிய தலைமுறை (New Generation) மாடல் ஜப்பானில் (Japan) தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்திய சந்தையிலும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் (Petrol Hybrid) இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options)வழங்கப்பட்டுள்ளன.

New Generation Suzuki Swift

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஜப்பான் சந்தைக்கான சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 4 வீல் டிரைவ் (4WD) ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சமில்லை.

இதன்படி ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 360 டிகிரி கேமரா மற்றும் ரியர் வியூ கேமரா ஆகிய வசதிகள் எல்லாம் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

New Generation Suzuki Swift Interior Design

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜப்பான் சந்தைக்கான புதிய தலைமுறை சுஸுகி ஸ்விஃப்ட் காரில், அடாஸ் (ADAS) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு வசதியாகும். 9 மோனோ-டோன் மற்றும் 4 ட்யூயல்-டோன் என மொத்தம் 13 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சந்தையில் புதிய தலைமுறை சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிவிடி கியர் பாக்ஸ் மாடல்கள் வரும் டிசம்பர் 13ம் தேதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும். அதே நேரத்தில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் வரும் ஜனவரி 14ம் தேதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கூடிய விரைவில் இந்தியாவிலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய சாலைகளில் தற்போது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் ஒரு லிட்டருக்கு 35-40 கிமீ மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். ஜப்பான் சந்தையை போல், இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் அடாஸ் வசதி வழங்கப்படுமா? என்பது சந்தேகம்தான். அடாஸ் வசதியை வழங்கினால், காரின் விலை (Price) அதிகரித்து விடும் என்பதால், அது தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையே ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் குறித்த தகவல்களை பெறுவதற்காக, இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஷோரூம்களுக்கு, வாடிக்கையாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 6, 2023, 16:39 [IST]
English summary
New generation suzuki swift launched in japan engine features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+