ஹோண்டாவின் புதிய எஸ்யூவி காருக்கு இந்தியாவில் புக்கிங் துவக்கமா? ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு சவால் ரெடி!!

ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு போட்டியாக ஹோண்டா இந்தியாவிற்கு கொண்டுவரும் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், இந்த புதிய ஹோண்டா எஸ்யூவி கார் குறித்தும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பயன்படுத்தி கொள்ளும் விதமாக கிட்டத்தட்ட எல்லா கார் பிராண்ட்களில் இருந்தும் குறைந்தது ஒரு எஸ்யூவி கார் ஆவது விற்பனையில் உள்ளது. இருப்பினும், அளவில் சிறிய & பெரிய எஸ்யூவி கார்களை புதியது புதியதாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஹோண்டாவின் புதிய எஸ்யூவி காருக்கு புக்கிங் துவக்கமா?

அந்த வகையில் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக ஒரு எஸ்யூவி காரை இந்திய சந்தையில் களமிறக்க ஹோண்டா நிறுவனம் கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு வருகிறது. ஹோண்டாவின் இந்த புதிய எஸ்யூவி காரின் தோற்றம் மங்கலாக கடந்த ஜனவரியில் வெளிக்காட்டப்பட்டது. இந்த கார் ஏன் குறிப்பாக ஹூண்டாய் க்ரெட்டாவை டார்க்கெட் செய்து வருகிறது என்றால், இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்று க்ரெட்டா ஆகும்.

இதனால் ஹோண்டாவின் புதிய எஸ்யூவி காரையும் அளவில் சற்று சிறியதாக காம்பெக்ட் எஸ்யூவி காராக எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் தற்போது, புதிய ஹோண்டா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை உள்ளது என்பது தெரியவில்லை.

ஆதலால், இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் மையத்தை அணுகவும். இந்த காரின் விலைகள் வதந்தியாக கூட இன்னும் வெளிவரவில்லை. விலைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே காருக்கான முன்பதிவுகளை துவங்குவது வழக்கமான ஒன்றே ஆகும். இருப்பினும், ஹோண்டாவின் இந்த குறிப்பிட்ட எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் எந்த அறிவிப்பும் இன்னும் வெளிவரவில்லை.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் இந்த ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி கார் சமீபத்தில் கூட இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியானதை உங்களில் சிலருக்கு பார்த்திருப்பீர்கள். இந்தியாவில் இவ்வாறு ஹோண்டா கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு, அதன்பின் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுவது அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும்.

ஏனெனில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பெரும்பாலும் இவ்வாறு சோதனை எல்லாம் செய்யாமல் நேரடியாக வெளிநாட்டில் விற்பனையில் உள்ள காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதையே கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். இதில் இருந்து, இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரில் பெரிய தொகையை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் முதலீடு செய்திருப்பதை அறிய முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவிற்கு தற்சமயம் சிட்டி மற்றும் அமேஸ் கார்களை தவிர்த்து மற்றவை எதுவும் பெரியதாக நம்பிக்கைக்குரிய மாடலாக இல்லை. இதனாலேயே பெரிய தொகை முதலீட்டில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை ஹோண்டா இந்தியாவில் களமிறக்குகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ஹோண்டா எச்.ஆர்-வி காரின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 31, 2023, 14:53 [IST]
English summary
New honda compact suv car unofficial bookings starts in india rumour
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+