புதிய டர்போ என்ஜின் உடன் ஹூண்டாய் அல்கஸாரை வாங்க ரெடி ஆகுங்க... டெலிவிரிகள் ஸ்டார்ட் ஆயிடுச்சு!!

புதிய 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் ஹூண்டாய் அல்கஸார் காரின் டெலிவிரிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், அல்கஸாரில் ஹூண்டாய் நிறுவனம் புதியதாக வழங்கியுள்ள டர்போ என்ஜின் குறித்தும் முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, நாட்டில் எந்த மூலையில் விற்பனை செய்யப்படும் வாகனத்திலும் ரியல்-டிரைவ்-எமிஷனுக்கு இணக்கமான என்ஜின் இருத்தல் வேண்டும். இதன் விளைவாகவே, அல்கஸாரில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

புதிய டர்போ என்ஜின் உடன் ஹூண்டாய் அல்கஸாரை வாங்க ரெடி ஆகுங்க

இந்த நிலையில் தற்போது, புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் அல்கஸார் கார்களை புக் செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் ஒரு சில டீலர்ஷிப் மையங்களில் துவங்கியுள்ளன. இதனால் வரும் நாட்களில் அனைத்து டீலர்ஷிப்களிலும் இந்த காரின் டெலிவிரிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடிய இந்த புதிய 1.5 லிட்டர் டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 157.8 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இது அல்கஸாரில் முன்பு வழங்கப்பட்டு வந்த டர்போ பெட்ரோல் என்ஜினை காட்டிலும் 1 பிஎச்பி மற்றும் 62 என்எம் டார்க் திறன் அதிகமாகும். இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸை பெறலாம். இதில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அல்கஸாரில் 17.5kmpl மைலேஜையும், டிசிடி கியர்பாக்ஸில் சற்று அதிகமாக 18 kmpl மைலேஜையும் பெறலாம் என்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

புதிய டர்போ என்ஜின் உடன் ஹூண்டாய் அல்கஸாரை வாங்க ரெடி ஆகுங்க

புதிய 1.5 லிட்டர் டர்போ என்ஜினை பிரெஸ்டீஜ், பிளாட்டினம், பிளாட்டினம் (ஆப்ஷ்னல்), சிக்னெச்சர் மற்றும் சிக்னெச்சர் (ஆப்ஷ்னல்) என 5 விதமான வேரியண்ட்களுள் ஒன்றில் வாங்கலாம். இதில் பிளாட்டினம் (ஆப்ஷ்னல்) மற்றும் சிக்னெச்சர் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்கள் பிரத்யேகமாக 6-இருக்கை தேர்வில் கிடைக்கும். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2023 அல்கஸார் கார் முன்பை கட்டிலும் பாதுகாப்பு மிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. விலையை பொறுத்தவரையில், புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் அல்கஸார் காரின் விலை ஆனது ரூ.16.78 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த வேரியண்ட்டில் பிரெஸ்டீஜ் வேரியண்ட் கிடைக்கும்.

புதிய டர்போ என்ஜின் உடன் ஹூண்டாய் அல்கஸாரை வாங்க ரெடி ஆகுங்க

அதுவே, அதிகப்பட்ச விலையான ரூ.20.28 லட்சத்தில் டிசிடி கியர்பாக்ஸ் உடன் சிக்னெச்சர் (ஆப்ஷ்னல்) வேரியண்ட் கிடைக்கும். இவை அனைத்தும் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். புதிய அல்கஸார் டர்போ காருக்கான முன்பதிவுகள் ரூ.25,000 என்ற முன்தொகை உடன் நடைபெற்று வருகின்றன. முன்பு இந்த காரில் வழங்கப்பட்டு வந்த 2.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக புதிய டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கும் விதமாக பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, தனது அல்கஸார் காரில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினிற்கு பதிலாக டர்போ என்ஜினை ஹூண்டாய் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக அல்கஸார் காரின் செயல்படுதிறன் அதிகமாகி இருக்கும் என்பது உறுதி.

Image Courtesy: Modi Hyundai

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 10:57 [IST]
English summary
New hyundai alcazar turbo car deliveries start
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X