செம்ம... இந்த புதிய மஹிந்திரா தாரின் டெலிவிரி துவங்கியாச்சா!! புக் செய்தவர்களை இனி கையில் பிடிக்க முடியாது...

இந்தியாவில் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தாருக்கு மாருதி சுஸுகியின் புதிய ஜிம்னி வாகனத்தின் மூலமாக ஏற்கனவே முக்கியமான போட்டி ஆரம்பித்துவிட்டது. ஆனால் உண்மையில் இந்த போட்டியை சமாளிக்கும் விதத்தில் சில பல ஏற்பாடுகளை ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் செய்துவிட்டது. அத்தகைய ஏற்பாடுகளுள் ஒன்றுதான் சாதாரண சாலைக்கு ஏற்ற தார் 4x2 வேரியண்ட்டின் அறிமுகமாகும்.

கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய தார் வாகனத்தின் முக்கிய சிறப்பம்சமே அதன் விலை தான். ஏனெனில் தார் 4x2 வேரியண்ட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.9.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை முன்பதிவு செய்யும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பதால், இந்த விலை தற்காலிகமானதே. அதாவது, விரைவில் இந்த புதிய தார் வாகனத்தின் விலை நிச்சயமாக அதிகரிக்கப்படும்.

செம்ம... இந்த புதிய மஹிந்திரா தாரின் டெலிவிரி துவங்கியாச்சா!

இந்த நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய தார் 4x2 ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளை மஹிந்திரா நிறுவனத்தின் சில டீலர்ஷிப் ஷோரூம்கள் துவங்கியுள்ளன. தற்சமயம் விற்பனையில் இருப்பது மஹிந்திரா தாரின் 2ஆம் தலைமுறை ஆகும். இது கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தார் வாகனத்தின் வழக்கமான தோற்றத்தில்தான் புதிய 4x2 வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது, அதாவது தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

அதேபோல் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில்தான் இந்த புதிய வேரியண்ட் கொண்டுவரப்பட்டுள்ளது. வித்தியாசம் எங்கு இருக்கிறது என்றால், இயங்கும் தன்மையில் தான். 2020இன் இறுதியில் இருந்து விற்பனையில் இருக்கும் தாரில் என்ஜினின் இயக்க ஆற்றல் அனைத்து 4 சக்கரங்களுக்கும் செல்லும். இதன் மூலமாக சகதி மற்றும் மேடு & பள்ளம் மிகுந்த ஆஃப்-ரோடுகளில் எளிதாக பயணிக்கலாம்.

செம்ம... இந்த புதிய மஹிந்திரா தாரின் டெலிவிரி துவங்கியாச்சா!

புதிய வேரியண்ட்டில் பின்னால் இரு சக்கரங்களுக்கு மட்டுமே ஆற்றல் செல்கிறது. இதனால் இந்த வேரியண்ட் சாதாரண சாலைக்களுக்கே ஏற்றதாக இருக்கும். இருப்பினும், எக்ஸ்-ஷோரூம் விலை எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு இந்த புதிய வேரியண்ட்டை முன்பதிவு செய்கின்றனர். இதன் காரணமாக, முன்பதிவு செய்த பின் டெலிவிரிக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், புதிய தார் 4x2 வேரியண்ட்டை குறிப்பிட்ட சில ஆப்ஷன்களில் புக் செய்தோர் காத்திருக்க வேண்டிய காலம் சுமார் 18 மாதங்கள், அதாவது 1.5 வருடம் வரையில் உள்ளது. இந்த வெயிட்டிங் பிரீயட் ஆனது நகரத்தை பொறுத்து மாறுப்படும். தற்போது முதல் ஆளாக டெலிவிரி பெற்றிருப்போர், முன்பதிவு துவங்கிய அடுத்த சில மணிநேரங்களிலேயே வாகனத்தை முன்பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது வாகனத்தை விரைவாக கிடைக்கும் ஆப்ஷன்களில் அவர்கள் புக் செய்தவர்களாக இருக்க வேண்டும்.

செம்ம... இந்த புதிய மஹிந்திரா தாரின் டெலிவிரி துவங்கியாச்சா!

அதேநேரம் மறுப்பக்கம், தார் 4x4 வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. இந்த ஆஃப்-ரோடு வேரியண்ட்டை எந்தவொரு ஆப்ஷனிலும் அதிகப்பட்சமாக 1 மாதத்திற்குள் டெலிவிரி பெற்றுவிடலாம். ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்டிலும் டீசல் என்ஜின் உடனான ஆப்ஷனுக்கு மட்டுமே 1.5 வருடம் வரையில் காத்திருப்பு காலம் உள்ளது. மற்றப்படி, பெட்ரோல் என்ஜின் உடன் இந்த புதிய வேரியண்ட்டை அதிகப்பட்சமாக 5 வாரங்களில் டெலிவிரி எடுத்துவிடலாம்.

4-வீல்-டிரைவ் வேரியண்ட்டை கன்வெர்டபிள் மற்றும் ஹார்ட் என இரு விதமான மேற்கூரை தேர்வுகளில் பெறலாம். இதில் ஹார்ட் ஆப்ஷனில் மேற்கூரை முழுவதுமாக தகட்டினால் செய்யப்பட்டு நீக்க முடியாததாக இருக்கும். அதுவே கன்வெர்டபிள் வேரியண்ட்டில் மேற்கூரையை தேவைக்கு ஏற்ப நீக்கியும் கொள்ளலாம். ஆனால் புதிய தார் 4x2 வேரியண்ட்டை ஹார்ட் டாப் ஆப்ஷனில் மட்டுமே பெற முடியும். என்ஜின் தேர்வுகளாக 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Image Courtesy: The Mehul Vlogs

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 13:33 [IST]
English summary
New mahindra thar 4x2 rwd deliveries have started
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+