புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ-53 காப்ரியோலெட்... பணக்காரர்கள் போட்டி போட்டு வாங்க போறாங்க!! விலை எவ்வளவு தெரியுமா?

ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியாவில் அதன் ஏஎம்ஜி பிராண்டில் புதிய இ 53 காப்ரியோலெட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொதுவாகவே, மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார்கள் செயல்படுதிறன்மிக்கவைகளாக விளங்குகின்றன. இத்தகைய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இருந்து இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ள 4வது 53 கார் இதுவாகும். மேலும், புதிய 2023ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்துள்ள முதல் மெர்சிடிஸ் காரும் இ 53 காப்ரியோலெட் ஆகும். புதிய இ 53 காப்ரியோலெட் காரில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் ஆனது 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டு உள்ளது.

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட் - அறிமுகம்!!

இதில், 6-சிலிண்டர் என்ஜின் மூலமாகவே அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 429 பிஎச்பி பவரையும், 1800 - 5,800 ஆர்பிஎம்-இல் 520 என்எம் டார்க் திறன் வரையிலும் பெற முடியும். ஆனால் கூடுதலாக ஸ்டார்டர்-ஆல்டர்னேட்டர் சிஸ்டம் என்ஜின் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக 22 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனில் காரை இயக்கலாம். இந்த இயக்க ஆற்றல்கள் 9-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும்.

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட் காரில் 0-வில் இருந்து 100 kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த லக்சரி ஹைப்ரீட் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். இந்த காரில் ஏஎம்ஜி பிராண்டிற்கே உண்டான பிரத்யேகமான ரைடு கண்ட்ரோல்+ அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சவுகரியமான & மகிழ்ச்சியான பயணத்தை பெறுவதற்காக மல்டி-சாம்பர்டு ஏர் சஸ்பென்ஷனும் உள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரையில், இது வழக்கமான மெர்சிடிஸ் இ-கிளாஸ் காரின் ஸ்போர்டியான தோற்றம் கொண்ட புதிய செயல்திறன்மிக்க வேரியண்ட் ஆகும். முன்பக்கத்தில் இந்த கார் எல்இடி டிஆர்எல்-களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய எல்இடி ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இவற்றுடன் செங்குத்தான ஸ்லாட்கள் மற்றும் பெரிய மெர்சிடிஸ் ஸ்டார் லோகோ உடன் பிரத்யேகமான ஏஎம்ஜி பனமெரிகானா க்ரில் வழங்கப்பட்டுள்ளது. ஏஎம்ஜி லோகோ ஆனது க்ரில்லில் மெர்சிடிஸ் லோகோவிற்கு பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட் - அறிமுகம்!!

க்ரில்லிற்கு கீழே வழங்கப்பட்டுள்ள பெரிய ஏர் டேம் என்ஜின் பாகங்களை குளிர்விக்க உதவியாக இருக்கும். ஏர் டேம்மிற்கு கீழே புதிய ஸ்பிளிட்டர் நம்மை கவர்ந்திழுக்கிறது. அதேபோல் பக்கவாட்டில் 19-இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக ஏஎம்ஜி அலாய் சக்கரங்களும் நம்மை வசீகரிக்கின்றன. பின்பக்கத்தில் புதிய பூட்லிட் ஸ்பாய்லரும், இரு துண்டுகளாக எல்இடி விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. என்ஜின் கக்கும் புகையை வெளியிட குவாட் எக்ஸாஸ்ட் டெயில் பைப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் விட காரின் மேற்கூரையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட் காரில் மடித்து வைக்கக்கூடிய மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. இந்த சாஃப்ட்-டாப் மேற்கூரை ஆனது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக வெறும் 20 வினாடிகளில் பின்பக்க பூட் பகுதியில் மடிந்துவிடும். அப்படியே உட்புறத்திற்கு சென்றால், டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள ஏஎம்ஜி ஸ்டேரிங் சக்கரமும், இரு டயல்களும் நம்மை வரவேற்கின்றன.

டேஸ்போர்டில் 12.3 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று என 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஓட்டுனர் இருக்கைக்கு எதிராக ஹெட்ஸ்-அப் திரையையும் நம்மால் பார்க்க முடிகிறது. மெர்சிடிஸ் கார்களில் இருக்கை சவுகரியத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்கையில், ரூ.1.3 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட் காரில் எந்த அளவில் இருக்கை செட்-அப் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2023, 15:26 [IST]
English summary
New mercedes amg e 53 cabriolet launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+