நாயகன் மீண்டும் வரான்! ரெனால்ட் டஸ்டர் கார் நவ 29ல் அறிமுகம்!
ரெனால்ட் டஸ்டர் கார் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இந்தியாவிற்கு வரப் போகிறது. வரும் நவம்பர் 29ஆம் தேதி புதிய தலைமுறை டஸ்டர் கார் போர்ச்சுகல் நாட்டில் அறிமுகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிற்குள் நுழையும் போது தனது டஸ்டர் காரை அறிமுகப்படுத்தி மிகப்பெரிய நிறுவனமாக இந்தியாவில் அறிமுகமானது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எஸ்யூவி காரை இந்தியாவில் பிரபலமாகியதில் இந்நிறுவனத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. இன்றளவும் டஸ்டர் கார் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. தற்போது இந்த கார் விற்பனையில் இல்லை.

இந்நிலையில் மக்கள் மத்தியில் ரெனால்ட் நிறுவனம் மீண்டும் தனது டஸ்டர் காரை அப்டேட் செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என பேச்சு எழுந்து வருகிறது. தற்போது உள்ள மார்டன் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த கார் வடிவமைக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்காக ரெனால்ட் நிறுவனமும் முயற்சி செய்து வருகிறது.
போர்ச்சுகல் நாட்டில் ரெனால்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டேஷிக்கா என்ற நிறுவனம் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனம் அந்நாட்டிற்கான புதிய எஸ்யூவி கார் ஒன்றை தயா.ரித்து அறிமுகப்படுத்த உள்ளது இதற்கான கான்செப்ட் கார் ஏற்கனவே வெளியான நிலையில் இதன் முழு புரோடெக்ஷன் வெர்ஷன் கார் வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனம் இந்த காரை தான் இந்தியாவிற்கு கொண்டுவந்து தனது சிஎம்எஃப் பி பிளாட்பார்மில் உருவாக்கி இந்தியாவின் புதிய தலைமுறை டஸ்டர்காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் அதிக ரக்கட் லுக்கில் இருக்கும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மூன்று வரிசை சீட்டர் கொண்ட ஒரு எஸ்யூவி காராக விற்பனைக்கு வரும்.
இந்த காரி இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் ஆக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 118 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கும் மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஹைபிரிட் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு ஹைபிரிட் டஸ்டர் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 138 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட காரராக இருக்கும். அடுத்ததாக மூன்றாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 168 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ரெனால்ட் நிறுவனத்தின் இந்த டஸ்டர் கார் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓராண்டு காத்திருந்தால் இந்த டஸ்டர் காரை இந்தியாவில் வாங்கிவிடலாம். இந்த கார் விற்பனைக்கு வந்தால் ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் இந்த கார் 3 வரிசை சீட்டர் கொண்ட காராக இருப்பதால் எர்டிகா, இனோவா போன்ற கார்களுக்கும் இது கடும் போட்டியாக இருக்கலாம். இந்த காரில் பெட்ரோல், ஹைபிரிட், மற்றும் ஃபிளக்ஸ் ஃப்யூயல் ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன் இருப்பதால் அதிக வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விற்பனைக்கு வந்தால் இந்த காரின் விற்பனை நிச்சயம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அறிமுகமாக இந்த டஸ்டர் காரை அறிமுகப்படுத்தி உள்ளே வந்தாலும் தற்போது இந்நிறுவனத்திடம் சொல்லிக் கொள்ளும்படி சூப்பரான கார்கள் எதுவும் இல்லை. இதனால் மந்தமான விற்பனையை நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்த கார் இந்த நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றி போடும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









