கொஞ்சம் பொறுங்க... ஸ்கோடா குஷாக்கின் அதிரடி விற்பனை இனிதான் ஆரம்பம் - புதிய ஸ்பெஷல் எடிசன் குறைந்த விலையில்!!
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய குஷாக் ஆனிக்ஸ் எடிசன் (Skoda Kushaq Onyx Edition) காரை ரூ.12.39 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்கோடா காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஸ்கோடா குஷாக்கும் ஒன்றாகும். இத்தகைய காரில் ஆனிக்ஸ் என்ற புதிய ஸ்பெஷல் எடிசன் ஆனது விலை குறைவான வேரியண்ட்களுள் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆனிக்ஸ் எடிசனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.12.39 லட்சம் என்ற விலை ஆனது குஷாக்கின் ஆரம்ப நிலை ஆக்டீவ் வேரியண்ட்டை காட்டிலும் ரூ.80,000 மட்டுமே அதிகமாகும்.

தோற்றத்தில் மாற்றங்கள் என்று பார்த்தால், காரின் பக்கவாட்டில் கதவுகளில் கிரே நிறத்தில் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக்ஸ் தான் புதிய ஆனிக்ஸ் எடிசனை வழக்கமான குஷாக் வேரியண்ட்களில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகிறது. இது தவிர்த்து, B-பில்லரில் 'ஆனிக்ஸ்' லோகோ முத்திரை, முன் பம்பரில் ஃபாக்ஸ் டிஃப்யூஸர், முன் க்ரில்லை சுற்றிலும் க்ரோம் சரவுண்டிங்ஸ் மற்றும் 16-இன்ச் சக்கரங்கள் உள்ளிட்டவையும் புதிய குஷாக் ஆனிக்ஸ் எடிசனின் சிறப்பம்சங்களாகும்.
இதில் 16-இன்ச் சக்கரங்களுக்கு புதிய பிளாஸ்டிக் கவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஆனிக்ஸ் எடிசனின் அடையாளமே காரின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள கிரே நிற கிராஃபிக்ஸ் தான். இதனை ஹைலைட் படுத்தியே இந்த ஸ்பெஷல் எடிசனை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிப்பக்கத்தில் இந்த கிராஃபிக்ஸிற்கு ஏற்ப இந்த காரின் உட்பக்கத்திலும் தையலிடப்பட்ட டிசைன் பேட்டர்னில் டேஸ்போர்டு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏசி துளைகளை க்ரோம் சூழ்ந்துள்ளது. கேபின் முழுவதும் கருப்பு & கிரே நிறத்தில் உள்ளது. 'Onyx' முத்திரைகளை உட்பக்க கேபினில் ஸ்கஃப் தட்டுகள் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் பார்க்க முடிகிறது. தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், எல்இடி ஹெட்லைட்கள், ஃபாக் விளக்குகள், ரியர் டிஃபாக்கர், வாஷர் உடன் ரியர் வைபர், 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை புதிய குஷாக் ஆனிக்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்றவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. ஸ்கோடா குஷாக், உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளதை மறந்துவிட வேண்டாம். இந்த எஸ்யூவி காரில் 2 ஏர்பேக்குகள், இஎஸ்பி, டிபிஎம்எஸ், ஐசோஃபிக்ஸ் பாயிண்ட்ஸ் உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
மற்றப்படி, புதிய குஷாக் ஆனிக்ஸ் காரை 1.0 லிட்டர் 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற ஒரேயொரு என்ஜின் தேர்வில் மட்டுமே பெற முடியும். குஷாக்கில் 2 விதமான என்ஜின் தேர்வுகளை ஸ்கோடா வழங்குகிறது. ஆனால் புதிய ஆனிக்ஸ் வேரியண்ட் மேற்கூறப்பட்ட பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் கிடைக்கும். அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ஆனிக்ஸ் எடிசனில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஸ்கோடா குஷாக் போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் நிறுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் அவ்வப்போது அப்டேட்களும், ஆனிக்ஸ் போன்ற புதிய எடிசன் கார்களின் அறிமுகங்களும் அவசியமானது ஆகும். பொதுவாகவே, ஸ்பெஷல் எடிசன் என்றால் டாப் வேரியண்ட்டின் அடிப்படையில்தான் பெரும்பாலான கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும். ஆனால் குஷாக்கில் விலை குறைவானதாக ஆனிக்ஸ் எடிசனை ஸ்கோடா கொண்டுவந்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது ஆகும்.


Click it and Unblock the Notifications








