இந்திய சாலைகளை அலங்கரிக்க போகும் புது டாடா கார் இதுதான்!! ஸ்டைலை பார்த்து எல்லாரும் மயங்கி விழ போறாங்க!
டாடா ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் (Tata Harrier Facelift) கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர் ஒருவருக்கு ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று டெலிவிரி கொடுக்கும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார் ஹெரியர் ஆகும். இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டெலிவிரிகள் சில டாடா டீலர்ஷிப் ஷோரூம்களில் துவங்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில நம்பர் பிளேட்டை கொண்ட புதிய ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று மாலை உடன் ஷோரூம் ஒன்றின் வளாகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்படும் வீடியோ யுடியூபில் வெளியாகி உள்ளது. ரூ.15.49 லட்சத்தில் இருந்து ரூ.26.44 லட்சம் வரையில் புதிய ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 13 வேரியண்ட்களில், 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 டோக்கன் தொகை உடன் இந்த எஸ்யூவி காரை டாடாவின் டீலர்ஷிப் ஷோரூம் அல்லது டாடாவின் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தள பக்கத்தின் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.

அப்டேட் செய்யப்பட்ட ஹெரியரில் முக்கிய சிறப்பம்சமாக மொபைல் கனெக்டிவிட்டி வசதி உடன் புதிய 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 2 ஸ்விட்ச்கள் உடன் டச் ஸ்க்ரீன் ஏர்கான் பேனல், ஜாகுவார் லேண்ட் ரோவரின் கியர் க்னாப், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் டிரைவ் மோட்களுக்கு ரோட்டரி டயல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
இவற்றுடன் 10.25-இன்ச் கஸ்டமைஸ் செய்யக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பவர்டு & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 13 மோட்கள் & சப்வூஃப்பர் உடன் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் அட்ரெனோக்ஸ் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவையும் ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக்குகள், அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் 11 செயல்பாடுகளுடன் அடாஸ் சேஃப்டி தொகுப்பு போன்றவையும் ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ளன. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய டாடா ஹெரியர் கார் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியது நினைவுக்கூரத்தக்கது.
ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களின் டெலிவிரிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. அதனை தொடர்ந்து தற்போது ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார்களுக்கான டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு, இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட்டின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. ஆனால், விரைவில் மற்ற நகரங்களிலும் டெலிவிரிகள் துவங்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications









