சென்னை ஆலையில் இந்த காரை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடுச்சா ஹூண்டாய்!! அப்புறம் என்ன புக் செய்ய வேண்டியதுதான்...

இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் புதிய தலைமுறை வெர்னா (Verna) கார்களை தயாரிக்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் துவங்கியுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படத்தை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை வெர்னா காரை வருகிற 2023 மார் 21ஆம் தேதி அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. புதிய வெர்னா காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஹூண்டாய் மோட்டார்ஸின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களில் ரூ.25,000 என்ற டோக்கன் தொகை உடன் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

சென்னை ஆலையில் புதிய ஹூண்டாய் வெர்னா - ஸ்பை படம்!!

இந்த நிலையில் தான் ஹூண்டாயின் சென்னை தொழிற்சாலையில் இருந்து புதிய வெர்னா காரின் ஸ்பை படங்கள் முதல்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளன. இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் புதிய வெர்னா கார் விற்பனை செய்யப்பட உள்ளது. வெளிப்பக்க தோற்றம், செயல்படுதிறன் மற்றும் பாதுகாப்பு என அனைத்து விஷயங்களிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால், புதிய வெர்னா இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், விரைவில் அமலாக உள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறையின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இ20 எனப்படும் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கும் அளவிற்கும் வெர்னாவின் என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், கூர்மையான பாடி பேனல்களை புதிய தலைமுறை வெர்னா கார் பெற்றுள்ளது. இதனால், வெர்னா காரை பார்க்கும்போது சிலருக்கு ஸ்போர்ட்ஸ் கார்கள் ஞாபகத்திற்கு வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

சென்னை ஆலையில் புதிய ஹூண்டாய் வெர்னா - ஸ்பை படம்!!

ஹூண்டாயின் சமீப கால மாடர்ன் கார்களை வடிவமைக்க பயன்படுத்தப்படும் சென்சுஅஸ் ஸ்போர்டினஸ் டிசைனின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வெர்னா கார் பாராமெட்ரிக் முன் க்ரில், நேர்த்தியான பிராஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் கூர்மையான பம்பர் டிசைன் உடன் முற்றிலும் புத்துணர்ச்சியான முன்பக்கத்தை பெற்றுள்ளது. முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் லைட் பார் ஆனது காரின் முழு அகலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டில் புதிய அலாய் சக்கரங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. அத்துடன் கூர்மையான கேரக்டர் லைன்கள், காரின் உடல் நிறத்தில் கதவு கைப்பிடிகள், டர்ன் சிக்னல்களுடன் இரு நிறங்களில் ரியர்-வியூ மிரர்கள் உள்ளிட்டவையும் இந்த பகுதியில் உள்ளன. அபிஸ் கருப்பு, அட்லஸ் வெள்ளை மற்றும் டெல்லுரியன் ப்ரவுன் என்ற 3 புதிய நிறத்தேர்வுகள் உள்பட மொத்தம் 7 மோனோடோன் மற்றும் 2 ட்யூவல்-டோன் பெயிண்ட் தேர்வுகளில் புதிய வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை ஆலையில் புதிய ஹூண்டாய் வெர்னா - ஸ்பை படம்!!

உட்புறத்தில் புதிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு புதிய அப்டேட்களுடன் புதுமையான டிசைனில் டேஸ்போர்டை புதிய வெர்னா பெற்றுள்ளது. புதிய அப்டேட்களின்படி, முக்கிய அம்சமாக ADAS வசதிகள் இந்த புதிய ஹூண்டாய் காரில் சேர்க்கப்பட்டுள்ளன. டீசல் என்ஜின் தேர்வு இல்லாமல், வெறும் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே புதிய வெர்னா கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இதனால், வெர்னா அமைந்துள்ள பிரீமியம் செடான் கார் பிரிவில் டீசல் என்ஜின் உடன் ஹோண்டா சிட்டி கார் மட்டுமே கிடைக்கும். ஹோண்டா சிட்டியிலும் விரைவில் டீசல் என்ஜின் தேர்வு நிறுத்தி கொள்ளப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிவிட்டன. புதிய வெர்னா காரில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வை ஹூண்டாய் வழங்கியுள்ளது. அப்டேட்களினால் சற்று விலை ஏற்றத்துடன், புதிய ஹூண்டாய் வெர்னாவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Image Courtesy: Rishav Saha

Article Published On: Tuesday, February 28, 2023, 10:29 [IST]
English summary
New verna spied at hyundais chennai plant launch soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+