கார் வாங்கும் போது ரூ4 லட்சம் லாபம் வேணுமா? இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க!

புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய குழப்பம் புதிதாகக் காரை வாங்கலாமா அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்கலாமா என்பது தான். இந்த பதிவில் அந்த குழப்பத்திற்குத் தீர்வை வழங்க முயற்சி செய்துள்ளோம். யார் யார் எதை வாங்கினால் பெஸ்ட் என காணலாம் வாருங்கள்.

கார் வாங்கும் முடிவை ஒருவர் எடுப்பது எளிதான விஷயம் கிடையாது. ஒருவர் தன் வாழ்நாளில் அவர் சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து இந்த முடிவை எடுப்பார். முதல் காரை ஒருவர் வாங்கும்போது அவர் பல விதங்களில் யோசித்துத் தான் எந்த காரை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுப்பார். அவர் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்வதால் இந்த முடிவை அவர் கவனமாக எடுக்க வேண்டும்.

new vs old car

பலருக்கு முதன் காரை வாங்கும் போது புதிய காராக வாங்க வேண்டுமா அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்க வேண்டுமா என்ற குழப்பம் இருக்கும். சிலர் புதிய காரில் தான் பிரச்சனை எதுவும் ஏற்படாது. செலவு வைக்காது எனச் சொல்லுவார்கள். சிலர் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிவிட்டு பின்னர் அடுத்த காரை புதிய காராக வாங்குங்கள் எனச் சொல்லுவார்கள். இதனால் இந்த குழப்பம் ஏற்படும்.

புதிய காரை பொருத்தவரை இன்று கார்களின் விலை மிக அதிகமாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ3 லட்சம் இருந்தால் ஒரு நல்ல புதிய காரை வாங்கிவிடலாம். ஆனால் இன்று ரூ5 லட்சமாவது வேண்டும். அப்படி இருக்கையில் முதலில் கார் வாங்குபவர்கள் பலர் லோன் போட்டுத் தான் கார் வாங்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

new vs old car

பழைய காரை பொருத்தவரை மார்க்கெட்டில் குறைவான விலையில் கிடைக்கும். ஆனால் உதிரிப் பாகங்கள் சேதமடைந்த அல்லது டுப்ளீகேட் உதிரிப்பாகங்கள் கொண்ட வாகனங்கள், கூட ஏமாற்றி விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம் இப்படியாக வாங்கூடிய கார்கள் வாங்கிய பின்னர் அதிக செலவு இழுத்து விட கூட வாய்ப்புள்ளது.

ஒரு காருக்கான சராசரி ஆயுள் என்பது 10-15 ஆண்டுகள் அல்லது 1 முதல் 1.5 லட்சம் கி.மீ வரை பயணிக்க முடியும். அப்படிக் கணக்கிட்டால் ஒரு கார் சராசரியாக ஆண்டிற்கு 10 ஆயிரம் கி.மீ வரை பயணிக்கும். சரி இப்பொழுது எந்த வாகனத்தை வாங்கலாம் என முடிவு செய்வோம் வாருங்கள்.

new vs old car

இப்பொழுது ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொள்வோம். உங்கள் கையில் ரூ4 லட்சம் வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை வைத்து ஒரு ஸ்போர்ட்ஸ் ரக பெட்ரோல் காரை வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு ஹூண்டாய் ஐ20 கார் சிறந்த சாய்ஸாக இருக்கும். இதன் புதிய கார் விலை ரூ9 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

நீங்கள் கையில் வைத்துள்ள ரூ4 லட்சம் போக மீதம் உள்ள ரூ5 லட்சத்தை லோன் மூலம் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு 6 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 10 சதவீதம் வட்டி எனக் கணக்கிட்டால் ரூ1.5 லட்சம் அதிகம் செலுத்த வேண்டும் ஆக மொத்தம் நீங்கள் இந்த காரை நீங்கள் வாங்க ரூ10.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது வரும்.

இதுவே நீங்கள் இந்த காரை 20 ஆயிரம் கி.மீ அல்லது 2 ஆண்டுகள் பழைய கார் மார்கெட்டில் ரூ4.5 லட்சத்தில் விற்பனைக்கு இருக்கிறது. அதை வாங்கினால் உங்களுக்கு புதிய காரை வாங்குவதை விட ரூ6 லட்சம் குறைவு தான். பழைய காரை வாங்கிய பின்பு செலவு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் அதையும் கணக்கிட்டுவிடுவோம்.

பழைய காரை வாங்கினால் மைலேஜ் கொஞ்சம் குறைவாக இருக்கும். ரூ20-30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது வரும். எப்படிப் பார்த்தாலும் ரூ2 லட்சத்திற்கு அதிகமாகச் செலவாகாது. அப்படிப் பார்த்தால் பழைய காரை வாங்கினால் நமக்கு அதிகபட்ச செலவே ரூ6.5 லட்சம் தான். எப்படிப் பார்த்தாலும் ரூ4 லட்சம் லாபம் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக கார் வாங்குபவர்கள் புதிய காரை விட ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது தான் லாபமாக இருக்கும். ஆனால் பழைய காரை வாங்கும் போது அதன் கண்டிஷனை பார்த்து வாங்க வேண்டும். உங்களை ஏமாற்றப் பல முயற்சிகள் நடக்கலாம். அதனால் கவனமாக இருக்கவேண்டும். அதே நேரம் 20 ஆயிரம் கி.மீ அதிகமாக ஓடிய காரை வாங்கினால் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 11, 2023, 14:11 [IST]
English summary
New vs old car your can save 4lakh rupees on choosing the correct option
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X