உயரமான மேம்பாலத்தின் மீதிருந்து விழுந்த கார்.. யாருக்கும் எதுமே ஆகலையா! இவங்களோட தயாரிப்பு இவ்ளோ சூப்பரானதா!!
டெலிவரி எடுத்த அன்றைய தினத்திலேயே கார் ஒன்று மேம்பாலத்தின் மீதிருந்து கீழே விழுந்து விபத்தைச் சந்தித்து இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் எங்கு அரங்கேறியது?, இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு என்னவானது என்பது பற்றிய அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு வந்த கார் மாடல்களில் ஹூண்டாய் வெர்னா-வும் ஒன்று. இது வெர்னாதானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த காரை தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஹெண்டாய் மோட்டார்ஸ்.

இந்த காருக்கு இந்திய செடான் கார் பிரியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரே டெலிவரி கொடுக்கப்பட்ட அன்றைய நாளிலேயே பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. குஜராத் மாநிலம், பில்மோரா எனும் பகுதியிலேயே இவ்விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. புதிய காரை டெலிவரி எடுத்த நபர், தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜாலி ரைடு சென்றிருக்கின்றார். இந்த நிலையிலேயே ஹூண்டாய் வெர்னா விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்திற்கு அதீத வேகமே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

கார் விபத்து நடைபெற்ற மேம்பாலத்தை நெருங்கியபோது சற்று அதிக வேகத்தில் வந்திருக்கின்றது. அப்போது வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரேக்கைப் பிடிக்க முயற்சி செய்திருக்கின்றார். ஆனால், பிரேக்கிற்கு பதிலாக அவர் ஆக்சலரேட்டர் பெடலை மிதித்துவிட்டார். இதனால் கூடுதல் வேகத்தில் சீறி பாய்ந்த ஹூண்டாய் வெர்னா, கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலத்தில் மோதி ஆற்றுப்படுகையில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக ஆற்றில் குறைவான அளவு நீர் ஓடிக் கொண்டிருந்ததால் கார் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. மேலும், கார் விழுந்த பகுதியில் துளி அளவும் நீர் இல்லாததை நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால், நீரால் ஏற்பட்ட சகதி அங்கு இருந்திருக்கின்றது. இது இருந்த காரணத்தினாலேயே அது லேசான சேதங்களுக்கு மட்டுமே ஆளாகி இருக்கின்றது.
குறிப்பாக, தலைகீழாக விழுந்த பின்பும் வெர்னாவின் மேற்கூரை கணிசமான அளவு மட்டுமே நசுங்கி இருக்கின்றது. குறைந்தது 20 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட பாலத்தின் மீதிருந்து விழுந்தும் இவ்வளவு குறைவான சேதத்திற்கே அது ஆளாகி இருக்கின்றது. இந்த காரில் மூன்று பேர் வரை பயணித்ததாகக் கூறப்படுகின்றது.
ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தகைய சூப்பரான குவாலிட்டியான காராகவே ஹூண்டாய் வெர்னா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. விபத்தை சந்தித்த கார் தற்போது மீட்கப்பட்டுவிட்டது. அந்த பகுதி வாசிகள் மற்றும் கிரேன் வாகனத்தின் உதவியின் வாயிலாக கார் மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் வெர்னா செடான் காரை அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. இதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த காரில் 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சமாக ஹூண்டாய் வழங்குகின்றது.
ஆறு ஏர்பேக்குகள், மும்முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகளை வெர்னாவின் அனைத்து வேரியண்டுகளிலும் ஹூண்டாய் கட்டாயமாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
இந்த அம்சத்தின் வாயிலாக தானாக பிரேக் பிடித்தல், வேகமாக செல்லும்போது தானாகவே டூர்கள் லாக் ஆகுதல், ஆட்டமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் விபத்து நேரங்களில் தானாகவே கதவுகளை திறத்தல் என எக்கசக்க வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை ஹூண்டாய் வெர்னாவில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அவற்றை உயர்நிலை தேர்வில் கிடைக்கும் வெர்னாவில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரணமாக இஎஸ்சி, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டிஸ்க் பிரேக்குகள், ஃபண்ட் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், கார்னரிங் லேம்ப் மற்றும் ஹூண்டாயின் ஸ்மார்ட் சென்ஸ் உள்ளஇட்ட அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி ஹுண்டாய் வெர்னா இந்திய சந்தையில் ரூ. 10,96,500 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக வேகம் மிகவும் ஆபத்தானது. இதை இன்று, நேற்று அல்ல பல காலமாக போக்குவரத்துத்துறை எச்சரித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இதை யாரும் பெரிதாக பொருட்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை. இதன் விளைவாகவே நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதைக் குறைத்தால் மட்டுமே விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும். குறிப்பாக போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம் என நாம் அனைவரும் சபதம் எடுத்தால் மட்டுமே விபத்துகள் குறையும்.


Click it and Unblock the Notifications