இந்த பென்ஸ் காருக்கு மலைபோல் குவியும் புக்கிங்! என்னங்க நடக்குது இந்தியால? எல்லாரும் பணக்காரங்க ஆயிட்டாங்களா!!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் - பென்ஸ் (Mercedes - Benz). அதன் ஜிஎல்சி (GLC ) சொகுசு கார் மாடலை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது இரண்டாம் தலைமுறை ஜிஎல்சி ஆகும். உலக அளவில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவிலும் இதற்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அதன் 2ஆம் தலைமுறையை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த காருக்கே தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, இந்தியர்கள் அதிகளவில் ஜிஎல்சி சொகுசு புக்கிங் செய்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதே 1,500க்கும் அதிகமானோர் இந்த காரை புக் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. இதனால், நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனையாகும் சொகுசு கார் என்பதை ஜிஎல்சி மீண்டும் உறுதி செய்திருக்கின்றது.
அறிமுகமாக இந்த சொகுசு காருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ. 73.50 லட்சம் விலையை நிர்ணயித்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை உங்களுக்கு மிக அதிகமாக தென்படலாம். ஆனால், காரின் சிறப்பு வசதிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது குறைவான விலையாக தெரியும்.
இதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜிஎல்சி சொகுசு காரின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி இருப்பதே முக்கிய காரணமாகும். சமீபத்தில் இந்த காரை இந்தியாவிலே உருவாக்குவதற்காக 100 கோடி ரூபாயை மேக்-இன் இந்தியா திட்டத்தின் கீழ் மெர்சிடிஸ் பென்ஸ் முதலீடு செய்தது குறிப்பிடத்தகுந்தது.
ஏற்கனவே கூறியதைப் போல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு காருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். இந்த காரை சுமார் 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அளவிற்கு அமோக வரவேற்பையே ஜிஎல்சி இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த விற்பனை எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது இதன் புதிய தலைமுறைக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
புதிய தலைமுறை ஜிஎல்சி இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, 300 4மேட்டிக் மற்றும் 220டி 4மேட்டிக் ஆகும். 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு, 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினே 300 4மேட்டிக் தேர்வில் பொருத்தப்பட்டுள்ளது. இது 254 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும்.
இதன் 220டி 4 மேட்டிக் தேர்வை பொருத்த வரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 194.4 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். இந்த இரண்டு மோட்டார்களிலும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.
இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜிற்கு வழி வகுக்கும். சிறப்பம்சங்களைப் பொருத்தவரை ஜிஎல்சி சொகுசு காரில் 11.9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ் கிளஸ்டர், ஒயர்லெஸ் செல்போன் கனெக்டிவிட்டி, ஹெட் அப் திரை, 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட்வியூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக பென்ஸ் வழங்கி இருக்கின்றது. ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களே ஜிஎல்சி பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், மிக சிறப்பாக இந்தியாவில் விற்பனை வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் புகழ்பெற்ற சொகுசு கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி இருக்கின்றது. சொகுசு வசதிக்கும், கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர்போன கார் மாடல் இது என்பதால் விற்பனையிலும் அது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் விற்பனை இனி வரும் காலங்களில் இந்த இரண்டாம் தலைமுறையால் இரட்டிப்பாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








