பெட்டி கடை வியாபரத்தை மிஞ்சிய மாருதி நெக்ஸா விற்பனை! அஞ்சு, பத்து இல்ல.. 2மில்லியன் கார்கள் விற்பனையாயிருக்கு!

பெட்டி கடையில் கூல் ட்ரிங்க்ஸ், கடலை மிட்டாய் ஆகியவை விற்பனையாவதைப் போல மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. பலர் கார்கள் வைத்திருப்பதை கௌரமாக கருதுகின்றனர்.

இதன் விளைவாக ஒரே வீட்டிலேயே இரண்டிற்கும் அதிகமான கார்கள் காட்சியளிக்கும் சூழல் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, புதிய கார்களை வாங்கிக் குவிப்பவர்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்போது சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. தினசரி பயன்பாட்டிற்காக கார்களை வாங்குபவர்களைவிட கெத்திற்காகவும், கௌரவத்திற்காகவும் கார்களை வாங்குபவர்களே அதிகமாக இருக்கின்றனர்.

நெக்ஸா

இந்த நிலையிலேயே பெட்டி கடையில் உள்ள பொருட்கள் விற்பனையாகுவதைபோல மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகி, நெக்ஸா ஷோரூம் வாயிலாக பிரீமியம் தர கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு பிரீமியம் தர கார்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

இக்னிஸ், பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார் மாடல்களை மட்டுமே நெக்ஸா ஷோரூம் வாயிலாக மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் வெகு விரைவில் மாருதியின் புதிய வரவுகளான ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகியவையும் இணைய இருக்கின்றன.

நெக்ஸா

இந்த கார்களின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படாதநிலையிலேயே புக்கிங்குகள் மிக அமோகமாக குவிந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி அதன் நெக்ஸா ஷோரூம் வாயிலாக 2 மில்லியனுக்கும் அதிகமான புதிய கார்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த இருக்கின்றது.

இந்த விற்பனை எண்ணிக்கை அடுத்து வரும் நாட்களில் இன்னும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பலேனோ, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட கார் மாடல்களுக்கு விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்துடன், ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய கார் மாடல்களும் விரைவில் இணைய இருக்கின்றன.

நெக்ஸா

இவை விற்பனைக்கு வந்த பின்னர் நெக்ஸாவின் விற்பனை இன்னும் பலமடங்கு சூடுபிடித்துக் காணப்படும். இதை இப்போதே உறுதிப்படுத்தும் விதமாக ஜிம்னிக்கு 23 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கும், ஃப்ரான்க்ஸ் காருக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கும் கிடைத்திருக்கின்றன. ஆகையால், அடுத்த சில மாதங்களில் இன்னும் சில லட்சங்கள் நெக்ஸா காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி ஜிம்னி ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையிலும், ஃப்ரான்க்ஸ் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் இந்த இரு கார்களின் விலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த இரு கார்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

அன்றைய தினமே இரு கார்களுக்கான புக்கிங்குகளும் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நெக்ஸா ஷோரூம்கள் நாட்டில் உள்ள 280க்கும் அதிகமான நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. முதல் நிலை நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களிலும் இந்த ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.

கிட்டதட்ட 440 நெக்ஸா ஷோரூம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் பிரீமியம் அம்சங்களை தாங்கிய வாகனங்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 2015 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக நெக்ஸா ஷோரூம் தொடங்கப்பட்டது. எஸ் கிராஸ், பலேனோ ஆகிய கார் மாடல்களே இந்த ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

இதைத்தொடர்ந்து, இக்னிஸ் மற்றும் சியாஸ் ஆகிய கார் மாடல்கள் 2017லும், எக்ஸ்எல்6 2019 ஆம் ஆண்டிலும் நெக்ஸா ஷோரூமில் இணைக்கப்பட்டன. கடைசியாக இணைக்கப்பட்ட கார் மாடல் கிராண்ட் விட்டாரா ஆகும். 2022 இல் இருந்து இந்த கார் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்கப்பட்டு வருகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மாருதி கார்களில் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்தாலும், விற்பனையில் ஒவ்வொரு மாதமும் இந்த நிறுவனமே சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், மாருதி சந்தையின் தேவையை உணர்ந்து அதன் தயாரிப்புகளை அதிக பாதுகாப்பானதாக தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றே ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகியவை ஆகும்.

Article Published On: Friday, March 24, 2023, 15:11 [IST]
English summary
Nexa hits 20 lakh sales milestone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+