7ம் தேதிய உங்க காலண்டர்ல குறித்து வச்சுக்கோங்க! டாடா இந்த காரை கொண்டு வந்து மாஸ் பண்ண போறாங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் காரின் இவி ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த காரை தனது கம்பஷன் இன்ஜின் காரை போலவே உருவாக்கியுள்ளது. இந்த காரின் அறிமுகம் குறித்த டீசர் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனத்தின் மிக முக்கியமான காராக இருப்பது நெக்ஸான் கார் தான். இந்த கார் பாதுகாப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்ற கார் என்பதால் மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் இந்த கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இந்த கார் நீண்ட நாட்களாக சிறப்பான விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இருக்கிறது.

tata nexon ev facelift launch

இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த நெக்ஸான் இவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வரும் 7ம் தேதி அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான டீசரையும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு காராக இருக்கிறது.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகமாகி உள்ள நிலையில் மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமாக உள்ள நெக்ஸான் இவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளியானால் அதன் வரவேற்பு சிறப்பாக இருக்கும் என்பதை நாங்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.

tata nexon ev facelift launch

இப்படியாக வரும் 7ம் தேதி டாட்டா நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிடப்பேவதாக அறிவித்துள்ளது. தற்போது வெளியான டீசரில் இந்த கார் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் கம்பஷன் இன்ஜின் கார் வரும் 14ம் தேதி தான் அறிமுகமாக போகிறது.

டாடா நிறுவனத்தின் கம்பேஷன் இன்ஜின் கொண்ட நெக்ஸான் கார் தற்போது புதிய டிசைன் அப்டேட்டை பெற்றுள்ளது. டாடா கர்வ் காரின் டிசைனை இன்ஸ்பயர் செய்து இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள அனைத்து அம்சங்களும் டாடா நெக்ஸான் இவி காரிலும் இருக்கிறது. பார்க்கும்போது இரண்டு காருக்கும் வித்யாசம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tata nexon ev facelift launch

முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த டாடா நெக்ஸான் இவி காரில் எல்இடி டிஆர்எல் பேட்டர்ன் வித்தியாசமாக இருக்கிறது. இதுவே கம்ப்ரஷன் இன்ஜின் நெக்ஸான் காரில் ஸ்பிலிட் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் லைட் என்பதால் அது கனெக்டட் எல்இடி டிஆர்எல் இல்லை. ஆனால் இவி காரில் கனெக்டெட் எல்இடிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த இரண்டு காருக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

முன்பக்கம் உள்ள எல்இடி டிஆர்எல் டைனமிக் ஃபங்ஷன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக டெய் லைட்டும் டைனமிக் ஃபங்ஷன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசரில் உள்ளபடி இந்த லைட்டுகளில் வெல்கம் பங்க்ஷன் இருக்கிறது. இது பெரும்பாலும் உயர்ரக கார்களில் தான் இருக்கும். இது வெறும் விஷுவல் டிரிக் தான் என்றாலும் இது இந்த காருக்கான ஒரு பிரீமியம் லுக்கை கொடுக்கிறது.

நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாம் தற்போது உள்ள அதே கார் போல தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் 30.2 கிலோ வாட் ஹவர் மற்றும் 40.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்கள், பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் ரேஞ்சை பொருத்தவரை 312 கிலோ மீட்டர் ரேஞ்ச் பிரைமிலும், 453 கிலோமீட்டர் ரேஞ்ச் மேக்ஸிமிலும் கிடைக்கும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா நெக்ஸான் இவி காரின் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய கார்கள் நெக்ஸான் இவி மிட் ரேஞ்ச் மற்றும் எக்ஸாம் இவி லாங் ரேஞ்ச் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் முன் பக்க டிஆர்எல் தவிர இதன் வீல்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

டாடா நிறுவனத்தின் இந்த மிட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் மாடல்களில் சில வேரியன்ட்கள் உள்ளது. அதன்படி ப்யூர், ஸ்மார்ட், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர் லெஸ் ஆகிய வேரியண்ட்கள் உள்ளது. இதில் எஸ் வேரியன்ட் சன் ரூஃப் உடனும் பிளஸ் வேரியன்ட் ஆப்ஷனல் கிட் உடனும் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரில் புதிதாக 10. 25 இன்ச் டச் ஸ்கிரீன் செட் ஆப் வயர் லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனும், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் மற்றும் கான்ஃபிகரபில் இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்ப்ளே உடனும் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரில் எச்விஏசி கண்ட்ரோல்கள் உள்ளன. ஸ்டேரிங் விலை பொறுத்தவரை இரண்டு ஸ்போக் ஸ்டேரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. அதில் இலுமினேட்டர் லோகோ இருக்கிறது. மேலும் இந்த காரின் முன் பக்க சீட்டுகள் வென்டிலேடட் சீட் எப்படி கம்பேஷன் நெக்ஸான் காரில் இருக்கிறதோ அதை போல சீட்டுகள் இதிலும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரை அப்டேட் செய்துள்ள நிலையில் அதன் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த காருக்காக ஏகப்பட்ட நபர்கள் காத்திருக்கிறார்கள். இந்த கார் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் இவியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Saturday, September 2, 2023, 11:46 [IST]
English summary
Nexon electric grand premiere set for september 7th 2023 under the new name nexon ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X