சொந்தக்காரங்களே பொறாமை ஆகுற அளவுக்கு கார் வச்சிருக்கும் கால்பந்தாட்ட வீரர்! காச பொருட்படுத்தவே இல்ல!
நெய்மர் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர் மட்டுமல்ல, அவர் மிக சிறந்த வாகன வாகன பிரியரும் ஆவார். இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு கார்களும், அரிய வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. பிரேசிலைச் சேர்ந்த இந்த ஸ்டார் விளையாட்டு வீரரிடம் இருக்கும் பல கார்கள் நம்மை பொறாமையில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன.
லம்போர்கினி வெனேனோ சூப்பர் கார் தொடங்கி லைகன் ஹைபர்ஸ்போர்ட் வரையிலான கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த கார்கள் நம்மை மட்டுமில்லைங்க நெய்மரைச் சார்ந்தவர்களையும், ஏன், ஒட்டுமொத்த கார் காதலர்களையும் பொறாமைக்கு தள்ளும் வகையில் இருக்கின்றன. இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆடி ஆர்8 ஸ்பைடர் வி10 பிளஸ் (Audi R8 Spyder V10 Plus), இது ஓர் அரிய வகை சூப்பர் கார் ஆகும். உலகளவிலேயே மிகவும் குறைவான இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இதன் விலை மிக மிக அதிகம் ஆகும். 171,000 அமெரிக்க டாலர்கள் இதன் மதிப்பாகும்.
இந்திய மதிப்பில் அதன் விலை 14,093,880 ரூபாய் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காராகவே ஆடி ஆர்8 ஸ்பைடர் வி10 பிளஸ் இருக்கின்றது. இதன் விலை மட்டும் அதிகம் இல்லைங்க, இந்த கார் வெளிப்படுத்தும் திறனும் மிக மிக அதிகம் ஆகும்.

இதன் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக 5.2 லிட்டர் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த திறனை சில செகண்டுகளிலேயே அது எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஃபெர்ராரி நிறுவனத்தின் பல தயாரிப்புகளையும் நெய்மர் பயன்படுத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் மிக பெரிய விசிறி என கூறும் அளவிற்கு அவர் பலதரப்பட்ட கார்களை பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 458 இத்தாலியா மற்றும் ஜிடிசி4 லஸ்ஸோ ஆகிய இரண்டும் பலர் கனவு வாகனமாக இருக்கின்றது.

இந்த இரு கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரு கார்களும் மிக அதிக வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்ட சூப்பர் கார்கள் ஆகும். 458 இத்தாலியா காரில் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி 8 மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 596 குதிரை திறன்களை வெளியேற்றும் திறன் கொண்டது. இதைவிட அதிக திறனை வெளியேற்றக் கூடிய சூப்பர் காராக ஜிடிசி 4 லஸ்ஸோ இருக்கின்றது. இந்த கார் அதிகபட்சமாக 672 குதிரை திறன்களை வெளியேற்றும். இந்த திறனுக்காக 6.3 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி12 மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

லைகன் ஹைபர்ஸ்போர்ட் (Lykan Hypersport), இது ஓர் 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். டபிள்யூ மோட்டார்ஸ் இந்த காரை மிக மிக அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. இந்த காரில் 780 குதிரை திறன்களை வெளியேற்றும் திறன் கொண்ட 3.7 லிட்டர் ட்வின் டர்போ மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 3க்கும் குறைவான செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த காரின் விலை ரூ. 27 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கின்றது. ஆமாங்க, விரல் விட்டு எண்ணுகின்ற எண்ணிக்கையிலேயே லைகன் ஹைபர்ஸ்போர்ட் சூப்பர் கார் பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர்.
மஸராட்டி எம்சி 12 (Maserati MC12), நெய்மர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு மிக மிக விலையுயர்ந்த கார் மாடலே இது ஆகும். இந்த கார் மாடலை வெறும் 12 யூனிட்டுகள் மட்டுமே மஸராட்டி விற்பனைச் செய்தது. அதில் ஒன்றையே நெய்மர் பயன்படுத்தி வருகின்றார். இதற்கு வரவேற்பு மிக அமோகமாக கிடைத்த காரணத்தினால் அடுத்தடுத்து என 25 யூனிட்டுகளையும், 12 யூனிட்டுகளையும் எம்சி12 மாடலை மஸராட்டி களமிறக்கியது குறிப்பிடத்தகுந்தது.
லம்போர்கினி வெனேனோ (Lamborghini Veneno), நெய்மர் கார் கலெக்சனில் உள்ள மிக மிக சூப்பர் கார் மாடல் இது ஆகும். லம்போர்கினியும் மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வழங்கியது. மிக சிறந்த ஏரோடைனமிக் தோற்றம் கொண்ட வாகனம் இதுவாகும். இந்த காரில் 6.5லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த கார் 740குதிரை திறனை வெளியேற்றும். லம்போர்கினி இந்த கார் மாடலை 4கூபேக்களாகவும், 9ரோட்ஸ்டர்களாகவும் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
