நிர்மலா சீதாராமன் பயன்படுத்தும் இந்த கார் மாடலை சந்தையில இருந்து சீக்கிரமே தூக்கியெறிய போறாங்க.. ஏன் தெரியுமா?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த கார் மாடலை வெகு விரைவில் இந்தியாவில் இருந்து அகற்ற தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா திட்டம் போட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கோடா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக ஆக்டேவியா கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடலை வெகு விரைவில் இந்திய சந்தையில் இருந்து ஸ்கோடா அகற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விற்பனையில் இருந்த ஆக்டேவியாவை நிறுவனம் வெளியேற்ற இருக்கின்றது. இதற்கு நிறுவனம் சார்பில் ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. விரைவில் சந்தையை விட்டு அகற்றப்பட இருக்கும் இந்த கார் மாடலையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீதாராமன்

ரயில் நிலையத்திற்கு வந்த நிர்மலா

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஓர் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள ரயில் நிலையத்திற்கு அவர் வந்தபோதே ஸ்கோடா ஆக்டேவியாவில் காட்சியளித்தார். ஸ்கோடா ஆக்டேவியா ஓர் பிரீமியம் தர செடான் ரக கார் ஆகும். இதில் பயணிப்பது சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். இதன் காரணத்தினாலேயே பல பிரபலங்களிடத்தில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது. தற்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பது நான்காம் தலைமுறை ஆக்டேவியா ஆகும்.

ஸ்கோடா நிறுவனம் இந்த கார் மாடலை மட்டுமின்றி இன்னும் சில செடான் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்லேவியா மற்றும் சூப்பர் ஆகியவையே அவை ஆகும். இவற்றில் ஸ்லேவியா என்பதே நிறுவனத்தின் லேட்டஸ்ட் வருகையாக இருக்கின்றது. இந்திய சந்தைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார் மாடலே இது ஆகும். ஆகையால், இந்தியர்களைக் கவரக் கூடிய அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

சீதாராமன்

காற்று மாசு அதிகம்

குறிப்பாக, அதிக பிரீமியம் வசதியை விரும்புவர்களை ஈர்க்கும் பொருட்டு ஸ்லேவியாவை ஸ்கோடா உருவாக்கி இருக்கின்றது. இதைப் போலவே அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக ஆக்டேவியா இருக்கின்றது. இந்த அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக தென்பட்டாலும் இதனை ஸ்கோடா வெகு விரைவில் இந்திய சந்தையை விட்டு வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

பிஎஸ்6 இரண்டாம் கட்டம்

இதைக் குறைக்கும் பொருட்டு மத்திய அரசு விரைவில் பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கின்றது. இது அமலுக்கு வர இருக்கின்ற காரணத்தினாலேயே ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியாவை வெளியேற்ற இருக்கின்றது. இந்த கார் மாடலுடன் சேர்த்து நிறுவனம் அதன் சூப்பர்ப் கார் மாடலையும் சந்தையை விட்டு வெளியேற்ற இருக்கின்றது. இதன் வெளியேற்றத்திற்கும் ரியல் டிரைவிங் எமிசன் எனும் புதிய பிஎஸ்6 ஸ்டேஜ் 2 விதியே காரணமாக இருக்கின்றது.

More from DriveSpark

ஏப்ரல் 1 முதல் அமல்

புதிய நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. புதிய விதியின்கீழ் பல்வேறு கருவிகள் கட்டாயமாக்கப்பட இருக்கின்றன. த்ரோட்டிலை மானிட்டர் செய்யுதல், கிராங்ஷாப்ட் பொசிஷனை மாற்றுதல், ஏர் இன்டேக் பிரஷ்ஷர், எஞ்ஜின் டெம்ப்ரேச்சரைக் கண்டறிதல் போன்ற பல்வேறு விஷயங்கள் அமல்படுத்தப்பட இருக்கின்றன. அனைத்தும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கூடுதலாக குறைக்கும் பொருட்டே இந்த அமைச்சங்கள் அனைத்தும் 2023 ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட இருக்கின்றன.

அரசின் இந்த நடவடிக்கையால் விரைவில் புதிய வாகனங்களின் விலை மேலும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய கார் மாடல்களை 2023 ஆம் ஆண்டில் இருந்து அதிக விலைக்கு விற்பனைச் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே இன்னும் காஸ்ட்லியானதாக புதிய கார்களை மாற்றும் வகையில் புதிய விதி அமல்படுத்தப்பட இருக்கின்றது. இந்தியாவில் இப்போது விற்பனையில் இருக்கும் ஆக்டோவியாவின் நான்காம் தலைமுறை சென்ற 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விலை விபரம்

இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே 26 லட்சத்திற்கும் அதிகமாகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இத்தகைய விலையுயர்ந்த பிரீமியம் தர காரையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த இரு கார் மாடல்களிலேயுமே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 190 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Tuesday, January 17, 2023, 17:14 [IST]
English summary
Nirmala sitharaman used skoda octavia
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+