சாலையில் வலம் வந்த மர்ம கார்! விஷயம் தெரிஞ்சதும் சந்தோஷமான மக்கள்! அதுக்குள்ள வேலையை ஆரம்பிச்சுட்டாங்களா!
இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை (Electric Car) விற்பனைக்கு அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதில், ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan) கூட்டணியும் ஒன்றாகும்.
ரெனால்ட்-நிஸான் கூட்டணி சென்னை (Chennai) ஆலையில் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இதன் மூலம் 6 புதிய கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதில், 2 எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும். தமிழ்நாட்டின் (Tamil Nadu) முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. எனவே ரெனால்ட்-நிஸான் கூட்டணியிடம் இருந்து பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

Image Courtesy
இந்த சூழலில் நிஸான் ஆர்யா (Nissan Ariya) எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் தற்போது தென்பட்டுள்ளது. இது சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் ஆகும். ஒரு லாரியில் வைத்து கொண்டு செல்லப்படும்போது, நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் காரின் தரிசனம் நமக்கு கிடைத்துள்ளது. அதன் உருவம் மறைக்கப்படாமல் இருந்தது என்பது இங்கே ஆச்சரியமான விஷயம் ஆகும்.
ரெனால்ட்-நிஸான் கூட்டணி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள 6 புதிய கார்களில் ஒன்றாக நிஸான் ஆர்யா இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 63 kWh மற்றும் 87 kWh பேட்டரிகள் ஆகும். இதில் 63 kWh பேட்டரியின் ரேஞ்ச் (Range) 402 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் 87 kWh பேட்டரியின் ரேஞ்ச் 529 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையிலும் இந்த 2 பேட்டரி ஆப்ஷன்கள் அப்படியே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், எலெக்ட்ரிக் கார் பயணம் செய்ய கூடிய கிலோ மீட்டர்கள்தான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. இதற்கிடையே நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை.
நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் காரின் கேபினில் இரண்டு 12.3 இன்ச் திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது. இந்த செட்-அப் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து கொண்டுள்ளது. இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் பாஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார் மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் யூரோ என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா இவி6 ஆகியவையும் இந்திய சந்தைக்கு புதுவரவுகள்தான்.
இதற்கிடையே நிஸான் ஆர்யா கார், லாரியில் கொண்டு செல்லப்பட்டதை மக்கள் பலர் குழப்பத்துடன் பார்த்துள்ளனர். இது இந்திய சந்தையில் விற்பனையில் இல்லாத கார் என்பதுதான் இதற்கு காரணம். அத்துடன் இதன் புகைப்படங்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் இது என்ன கார்? என்ற கேள்விகளை எழுப்பின. இந்த சூழலில் இது நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார் என்பதும், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும் செய்யப்படலாம் என்ற தகவலும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








