இந்த காரெல்லாம் வந்துச்சுன்னா மாருதி, டாடா எல்லாம் ஓரமா போகவேண்டியது தான் ஒவ்வொன்னும் தரமா இருக்குது

நிஸான் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் பெரிய அளவிலான கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்யாத நிலையில் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மிகப்பெரிய புரட்சியை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகும் கார்களைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.

நிஸான் எக்ஸ் டிரெயல்: நிஸான் நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்நிறுவனம் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் இந்த காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திவிடும் என தெரிகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nissan upcoming cars

அதில் ஒன்று ஒன்று 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட காராகவும், மற்றொன்று 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இன்ஜினாகவும் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. காரில் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெறும் முக்கியமாக அடாஸ் தொழில்நுட்பத்துடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைபர் எம்பிவி: ரெனால்ட் நிறுவனம் டிரைபர் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரை அடிப்படையாகக் கொண்டு நிஸான் நிறுவனம் 7 சீட்டர் கொண்ட எம் பி வி காரை உருவாக்க முடிவு செய்துள்ளது. ரெனால்ட் டிரைபர் கார் உருவாகும் அதே பிளாட்பார்மில் தான் இந்த காரும் தயாராகிறது.

nissan upcoming cars

இந்த காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் பெட்ரோலும் பொருத்தப்படலாம் என கூறப்படுகிறது, அல்லது இரண்டு இன்ஜினும் ஆப்ஷனாக கொண்ட காராக இது விற்பனைக்கு வரலாம். அப்படி வந்தால் விற்பனை அமோகமாக இருக்கும்.

இந்த கார் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இது வரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த கார் குறித்த ஆரம்பகட்ட கட்டமைப்பில் தான் நிஸான் நிறுவனம் இருக்கிறது. விரைவில் இப்படியான ஒரு காரை உருவாக்கி மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் பட்சத்தில் அது குறைந்த விலை எம்பிவி காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அப்படி வந்தால் அது மாருதி சுஸூகி எர்டிகா காருக்கு போட்டியாக விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

nissan upcoming cars

மிட் சைஸ் எஸ்யூவி 5 சீட்டர்: நிஸான் நிறுவனம் மீண்டும் வெப்சைஸ் செக்மெண்டில் களமிறங்க முடிவு செய்துள்ளது இதற்காக புதிதாக 5 சீட்டர் மிட் சைஸ் ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த கார் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை நிஸான் நிறுவனம் டர்போ பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்டி மற்றும் ஹைவே பயன்பாட்டிற்காக இந்த கார் உருவாக்கப்படலாம். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இந்த காரில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை ஷார்ப்பாகவும் மஸ்குலர் டிசைன் கொண்ட காராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

நிஸான் மிட்சைஸ் 7 சீட்டர்: நீஸான் நிறுவனம் மிட்சைன் 5 சீட்டர் காரை உருவாக்கப் போகிறது என நாம் முன்னால் பார்த்தோம். இந்த காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக 7 சீட்டர் எஸ்யூவையும் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புற டிசைன் பெரும்பாலும் 5 சீட்டர் எஸ்யூவி காரை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த கார் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை மார்க்கெட்டில் உள்ள போட்டி கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதமாக குறைவான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி 700, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என கூறப்படுகிறது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் கார்களை விற்பனை செய்யவில்லை. ஒரு சில கார்களை விற்பனை செய்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனம் வரிசையாக களம் இறக்கப் போகும் கார்களை பார்த்தால் நிச்சயம் மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை இந்த கார் நிறுவனம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 16, 2023, 12:01 [IST]
English summary
Nissan is set to introduce 4 upcoming vehicles in india
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X