சொல்லாம கொள்ளாம திடீர்னு விற்பனையை நிறுத்தீட்டாங்க! நல்ல காருக்கு இப்டி ஆயிருச்சே! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

இந்திய சந்தையில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்ளுக்கு வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவை வாரி வழங்கி கொண்டுள்ளனர். எனவேதான் இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்கள் வரிசையாக களமிறங்கி கொண்டுள்ளன.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) என ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் நிறைய கார்கள் விற்பனையில் இருந்து வருகின்றன.

சொல்லாம கொள்ளாம திடீர்னு விற்பனையை நிறுத்தீட்டாங்க! நல்ல காருக்கு இப்டி ஆயிருச்சே! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

எனினும் நல்ல வரவேற்பு இருப்பதன் காரணமாகவே, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்களும் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. ஆனால் இந்த செக்மெண்ட்டில் களமிறங்கும் அனைத்து கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து விடும் என கூறி விட முடியாது. நிஸான் கிக்ஸ் (Nissan Kicks) அதற்கு ஒரு உதாரணம்.

நிஸான் கிக்ஸ் மிட்-சைஸ் எஸ்யூவி கார், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப நிஸான் கிக்ஸ் கார் அப்டேட் செய்யப்பட்டது.

சொல்லாம கொள்ளாம திடீர்னு விற்பனையை நிறுத்தீட்டாங்க! நல்ல காருக்கு இப்டி ஆயிருச்சே! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

ஆனால் நிஸான் கிக்ஸ் காரின் விற்பனை சொல்லி கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் நிஸான் நிறுவனம் வெறும் 3 கிக்ஸ் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. அதை தொடர்ந்து வந்த 3 மாதங்கள், அதாவது டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒரு நிஸான் கிக்ஸ் கார் கூட விற்பனையாகவில்லை.

இதன் காரணமாக நிஸான் கிக்ஸ் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் நிஸான் கிக்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளையும் நிஸான் டீலர்கள் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நிஸான் நிறுவனத்தின் இணையதளத்தில் இன்னமும் கிக்ஸ் கார் பட்டியலிடப்பட்டுள்ளது.

நிஸான் இணையதளத்தில் இருந்து கிக்ஸ் கார் இன்னும் நீக்கப்படாத நிலையில், அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நிஸான் நிறுவனத்தின் கிக்ஸ் கார் தோல்வியை தழுவியிருந்தாலும் கூட, அதன் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

அத்துடன் இந்தியாவில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்காக மிகப்பெரிய அளவிலான முதலீட்டையும் நிஸான் நிறுவனம் செய்யவுள்ளது. இதில், எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே வரும்காலத்தில் வரவுள்ள நிஸான் கார்கள் வெற்றி பாதையில் பயணிக்கும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 23:30 [IST]
English summary
Nissan kicks discontinued in india reports
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+