இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை... இனி மேட் இன் சீனா-லாம் இல்ல... மேட் இன் சென்னைதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில் நிஸான் மேக்னைட் காரின் ஏஎம்டி (Nissan Magnite AMT) கார் தற்போது தென் ஆப்ரிக்காவில் (South Africa) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னைக்கு (Chennai) அருகே ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் நிஸான் மேக்னைட் ஏஎம்டி கார்கள்தான், தென் ஆப்ரிக்காவிற்கு (Export) ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் நிஸான் மேக்னைட் ஏஎம்டி கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) களமிறக்கப்பட்டுள்ளது.

Nissan Magnite AMT

அவை விசியா (Visia), அசெண்டா (Acenta) மற்றும் அசெண்டா ப்ளஸ் (Acenta Plus) ஆகியவை ஆகும். தென் ஆப்ரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிஸான் மேக்னைட் ஏஎம்டி காரில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 71 பிஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. நிஸான் மேக்னைட் ஏஎம்டி காரில் பல்வேறு வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

Tata Nexon Facelift vs Kia Sonet

ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். வேரியண்ட்களை பொறுத்து வசதிகளின் பட்டியல் மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், நிஸான் மேக்னைட் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாகும். கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுடன், நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

இதுதவிர ரெனால்ட் கைகர் (Renault Kiger), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுக்கும், நிஸான் மேக்னைட் விற்பனையில் சவால் அளித்து கொண்டுள்ளது. இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் தென் ஆப்ரிக்க சந்தையில் இந்த காரின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 10.50 லட்ச ரூபாயாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னையில் தயாரிக்கப்படும் நிஸான் மேக்னைட் ஏஎம்டி கார் தென் ஆப்ரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இந்தியாவை போல், தென் ஆப்ரிக்க சந்தையிலும் நிஸான் மேக்னைட் ஏஎம்டி காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 19:02 [IST]
English summary
Nissan magnite amt launched in south africa all details here
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+