கிட்டத்தட்ட 20 கிமீ மைலேஜ் கொடுக்கும்!! இதுக்கு மேல் வேறென்ன வேண்டும்? நிஸானின் புதிய ஜப்பான் டெக்னாலஜி கார்!

நிஸான் மேக்னைட் (Nissan Magnite) எஸ்யூவி காரில் புதியதாக இ.இசட்-ஷிஃப்ட் ஏஎம்டி என்ற பெயரில் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்தியாவின் விலை குறைவான ஏஎம்டி காராக புதிய மேக்னைட் இ.இசட்-ஷிஃப்ட் ஏஎம்டி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

மேக்னைட், நிஸானின் காம்பெக்ட் எஸ்யூவி கார். இந்தியாவில் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்று. மேக்னைட் கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த மாடலில் புதிய ஏஎம்டி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் மிக முக்கிய சிறப்பம்சம், இந்தியாவின் விலை குறைவான ஏஎம்டி கார் என்பதாகும்.

nissan magnite ez-shift amt pre-bookings

ஏனெனில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிமுக விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இன்னும் ஒரு மாத காலத்திற்கு, அதாவது 2023 நவம்பர் 10ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த விலை அமலில் இருக்குமாம். அதன்பின் இந்த விலை உயர்த்தப்படும். ஆதலால், இந்த காரை வாங்க விருப்பப்படுவோர் உடனடியாக முன்பதிவு செய்யவும்.

ஏஎம்டி (AMT) என்பதன் முழு விரிவாக்கம் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆகும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களை ஓட்டுவது இன்னும் எளிமையானதாக இருக்கும். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம், அதுமட்டுமின்றி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களில் அதிகமாக மைலேஜை பெற முடியாது. இந்த குறைகளை எல்லாம் நீக்கும் விதமாக கொண்டுவரப்பட்டதே ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகும்.

nissan magnite ez-shift amt pre-bookings

புதிய நிஸான் மேக்னைட் இ.இசட்-ஷிஃப்ட் காரில் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் டிரைவிங் எக்ஸ்ப்ரீயன்ஸ் கிடைக்கும் அதேவேளையில், இந்த காரில் க்ளட்ச்சை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 2-பெடல் கியர்பாக்ஸுக்கு நிஸான் நிறுவனம் வைத்துள்ள பெயர் தான் 'இ.இசட்-ஷிஃப்ட்' ஆகும்.

இந்த கியர்பாக்ஸை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது எளிமையானது என கூறும் நிஸான் நிறுவனம் இந்த கியர்பாக்ஸ் அட்டகாசமான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் என தெரிவித்துள்ளது. கார் இயங்கும் டிரைவிங் கண்டிஷன்ஸை பொறுத்து செயல்படக்கூடிய இ.இசட்-ஷிஃப்ட் தொழிற்நுட்பம் கியர் மாற்றத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களிலும் மென்மையான டிரைவிங் எக்ஸ்ப்ரீயன்ஸை பெறலாம்.

nissan magnite ez-shift amt pre-bookings

நிஸான் மேக்னைட் காரில் தற்போதைக்கு 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டுமே ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. டீசல் என்ஜின் உடன் மேக்னைட் கார் கிடைப்பதில்லை. இதே பெட்ரோல் என்ஜின் தான் புதிய மேக்னைட் இ.இசட்-ஷிஃப்ட் வேரியண்ட்டிலும் கிடைக்கும். இதே என்ஜினை பெறும் மற்ற மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்களில் கூட 19.35kmpl அளவிலான மைலேஜ் தான் கிடைக்கும் என தெரிவிக்கும் நிஸான் நிறுவனம், ஆனால் இ.இசட்-ஷிஃப்ட் வேரியண்ட்டில் 19.70kmpl மைலேஜை பெறலாம் என தெரிவிக்கிறது.

நிஸான் மேக்னைட் இ.இசட்-ஷிஃப்ட் காரில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என 2 விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் இண்டெலிஜண்ட் க்ரீப் ஃபங்க்‌ஷன் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது நின்று, நின்று செல்வதற்கு உதவியாக இருக்கும். அதாவது, ஆக்ஸலரேட்டரை மிதிக்காமல், பிரேக் பெடலில் இருந்து காலை எடுத்தாலே போதும் கார் மெதுவான வேகத்தில் இயங்க ஆரம்பித்துவிடும்.

nissan magnite ez-shift amt pre-bookings

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய காலத்தில், ஆட்டோமேட்டட் மேனுவல் கார்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. ஏனெனில், இத்தகைய கார்கள் வழங்கும் டிரைவிங் உணர்வே தனி சுகம் ஆகும். புதிய நிஸான் மேக்னைட் இ.இசட்-ஷிஃப்ட் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை ரிவியூவாக வழங்கியுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 10, 2023, 20:03 [IST]
English summary
Nissan magnite ez shift amt launched pre bookings starts
மேலும்... #நிஸான் #nissan #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X