30 ஆம் தேதிக்கு அப்பறம் நடக்க போற கதையே வேற.. இப்பவே வாங்கிடுங்க இல்லனா இந்த கியர்பாக்ஸ் காரோட விலை ஏறிடும்!

நிஸான் நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக மேக்னைட் இருக்கின்றது. இந்த கார் மாடலின் கூடுதலாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, புதிதாக மேக்னைட்டில் ஈசி ஷிஃப்ட் (Nissan Magnite EZ-Shift) எனும் புதிய தேர்வை நிஸான் விற்பனைக்குக் களமிறக்கியது. இது ஓர் ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட தேர்வு ஆகும்.

இந்த தேர்விற்கு அறிமுக சலுகை விலையாக ரூ. 6 லட்சத்து 49 ஆயிரத்து 900 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சலுகை விலையே வெகு விரைவில் முடிவு பெற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நிஸான் நிறுவனம் வருகின்ற நவம்பர் 30 வரையில் மட்டுமே மேலே கூறப்பட்ட சலுகை விலையில் மேக்னைட் ஈசி ஷிஃப்ட் தேர்வை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

Nissan magnite ez shift price hike

இதற்கு பின்னர் ரூ. 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் இதன் விலையில் உயர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிஸான் நிறுவனம் மேக்னைட் ஈசி ஷிஃப்ட் தேர்வை கடந்த அக்டோபர் மாதம் 10 அன்றே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த தேர்வில் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், கிளட்ச் இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்காது. ஸ்கூட்டர்களைப் போல கிளட்ச் இல்லாமல் இந்த வாகனத்தை இயக்கிக் கொள்ள முடியும். ஆனால், கியரை மட்டுமே மேனுவலாக ஓட்டுநரே மாற்றிக் கொள்ள வேண்டும்.

Nissan magnite ez shift wheel

குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்த வசதியை தங்களுடைய கார் மாடல்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வரிசையில் தற்போது நிஸான் மேக்னைட் வாயிலாக இணைந்திருக்கின்றது. இதன் விலையையே அது உயர்த்தவும் தற்போது திட்டமிட்டு இருக்கின்றது. ஸ்மூத்தான மற்றும் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெறும் நோக்கிலேயே நிஸான் மேக்னைட் ஈசி ஷிஃப்ட் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

அதேவேளையில், தோற்றம் என வரும் அனைத்து மேக்னைட் தேர்வுகளும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். ஆனால், அலங்கார விஷயத்தில் மட்டும் அவற்றிற்கு இடையே மாற்றங்கள் இருக்கும். குறிப்பாக, ஈசி ஷிஃப்ட் எனும் பேட்ஜ் காரின் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். இதேபோல், தேர்வுகளுக்கு சிறப்பம்சங்கள் மற்றும் வீல் உள்ளிட்டவற்றில் மாற்றம் வழங்கப்பட்டு இருக்கும்.

Nissan magnite ez shift rear

நிஸான் மேக்னைட் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரீமியம் ஆகிய வேரியண்டுகளில் விற்பனக்குக் கிடைக்கின்றது. இதுதவிர, மேக்னைட் கூரோ ஸ்பெஷல் எடிசன் மற்றும் மேக்னைட் ஈசி ஷிஃப்ட் ஆகிய தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஈசி ஷிஃப்ட் வசதிக் கொண்ட மேக்னைட் ஒரு லிட்டர் ஒன்றிற்கு 19.35 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அதேவேளையில், வழக்கமான மேனுவல் வேரியண்ட் நிஸான் மேக்னைட் 19.70 கிமீ வரையில் மைலேஜ் தரும். நிஸான் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேட்-இன் இந்தியா கார்களாகவே அவை உலக நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், வங்க தேசம், உகாண்டா உள்ளிட்ட 15 உலக நாடுகளுக்கு நம் நாட்டில் இருந்தே மேக்னைட் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவை போலவே அங்கும் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நிஸான் மேக்னைட் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை கார் மாடலாக நிஸான் மேக்னைட் இருக்கின்றது. இதற்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே நிஸான் ஈசி ஷிஃப்ட்டை சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதுபோன்று வரும் நாட்களில் இன்னும் பல புதிய வசதிகள் கொண்ட காரை அது களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2023, 19:26 [IST]
English summary
Nissan magnite ez shift price will be hike november 30
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X