நிஸான் மேக்னைட் ஈசி-ஷிஃப்ட்டை நேரில் ஓட்டி பார்த்த அனுபவம் கிடைக்கும்... இதோ ரைடு ரிவியூ வீடியோ!

இந்தியாவின் மற்றும் நிஸான் நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக மேக்னைட் இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பைக்கான ஸ்பான்சர் கார் மாடலும்கூட. இத்தகைய சிறப்புமிக்க கார் மாடலை கூடுதல் சிறப்புமிக்கதாக மாற்றும் விதமாக நிஸான் நிறுவனம் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலில் ஈசி-ஷிஃப்ட் (EZ-Shift) எனும் பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்ஜின் தேர்விற்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இது ஆகும். இந்த வெர்ஷனையே அண்மையில் நாங்கள் நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வைத்து ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அப்போது, நிஸான் மேக்னைட் இஇசட்-ஷிஃப்ட் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன. அவற்றில் முக்கியமான தகவலையே வீடியோவாக வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வழக்கமான பதிப்பைப் போலவே இந்த ஈசி-ஷிஃப்ட் தேர்விற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடலாக மேக்னைட் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வரவேற்புக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஈசி ஷிஃப்டின் அறிமுகம் இருக்கின்றது. இந்த அம்சத்தை தன்னுடைய கூட்டாளியான ரெனால்ட் உடன் இணைந்தே மேக்னைட் காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Nissan magnite ez shift review video

ஒரு சில மாற்றங்களை மட்டுமே இந்த ஈசி-ஷிஃப்ட் பதிப்பில் நிஸான் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, இஇசட்-ஷிஃப்ட் எனும் பேட்ஜ் காரின் பின் பக்கத்தில் நிஸான் வழங்கி இருக்கின்றது. அதேவேளையில், வெளிப்புற தோற்றம் மற்றும் அலங்காரம் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்கனவே விற்பனையில் இருந்துக் கொண்டிருக்கும் மேக்னைட்டைப் போலவே புதிய மேக்னைட் இஇசட்-ஷிஃப்டும் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, October 9, 2023, 11:16 [IST]
English summary
Nissan magnite ez shift ride review video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+