நாளைக்கு லான்ச் ஆகும் இந்த காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்! போட்டி நிறுவனங்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு கொண்டுள்ளது.
இதுதவிர ரெனால்ட் கைகர் (Renault Kiger), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுக்கும், நிஸான் மேக்னைட் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இந்த சூழலில் மேக்னைட் காரின் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக நிஸான் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் (Geza Edition) என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலின் விலை (Price) அறிவிக்கப்பட்டு, நாளை (மே 26) முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, நிஸான் மேக்னைட் கெஸா ஸ்பெஷல் எடிசன் மாடலை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்பட பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்பட்டிருக்கும்.
இதுதவிர சுறா துடுப்பு ஆன்டெனா வசதியும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற்றுள்ளது. நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் பிளேடு சில்வர், ஃப்ளார் கார்னெட் ரெட், ஸ்ட்ரோம் ஒயிட், சாண்ட்ஸ்டோன் ப்ரவுன் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய 5 கலர் ஆப்ஷன்களில் நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கெஸா எடிசன் மாடலின் வருகைக்கு பின்னர், நிஸான் மேக்னைட் காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. மேக்னைட் கெஸா எடிசன் மாடலை தொடர்ந்து, நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








