இந்த கார் காந்தம் மாதிரி எல்லாரையும் கவர போகுது! இந்திய தயாரிப்புகளுக்கு போட்டியாக களமிறங்கும் ஜப்பான் கார்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தத்தளித்து கொண்டிருந்த நிஸான் நிறுவனத்தை கை கொடுத்து தூக்கி விட்ட கார் எனவும் இதனை கூறலாம்.
இந்த சூழலில் இந்த காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) மாடல் ஒன்றை நிஸான் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலின் டீசரை (Teaser) நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கெஸா எடிசன் (Geza Edition) என்ற பெயரில், இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை, நிஸான் நிறுவனம் தற்போதே தொடங்கி விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
வரும் மே 26ம் தேதி, கெஸா எடிசன் மாடலின் விலையை (Price) அறிவித்து, நிஸான் நிறுவனம் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜப்பானிய திரையரங்குகள் மற்றும் அதன் இசை ஆகியவற்றை மனதில் வைத்து, நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இதுதவிர புதிய பின் பக்க கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் ஆகிய வசதிகளும் (Features) எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் (Electronic Stability Programme - ESP), ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் (Hill Start Assist - HSA) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System - TPMS) உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நிஸான் மேக்னைட் காரில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்-6 பேஸ்-2 விதிமுறைகளுக்கு இணக்கமான அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் கெஸா எடிசன் மாடலிலும் வழங்கப்படவுள்ளது. கெஸா எடிசன் மாடலின் வருகைக்கு பின்பு, நிஸான் மேக்னைட் காரின் விற்பனை அதிகரிக்கலாம்.
மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்காக உற்பத்தி நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை களமிறக்குவது வழக்கமான ஒரு விஷயம்தான். இதில் ஒரு சில ஸ்பெஷல் எடிசன்கள் பெறும் வரவேற்பை பெறுகின்றன. இந்த வகையில், நிஸான் மேக்னைட் கெஸா எடிசன் மாடலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








