கிமீட்டருக்கு 35பைசா மட்டுமே பராமரிப்பு செலவாகும் கார் மாடலில் சிறப்பு பதிப்பு அறிமுகம்! சேல்ஸ் பிச்சுக்கபோது!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan), இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் மேக்னைட் (Magnite)-ம் ஒன்று ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எஸ்யூவி (SUV) ரக கார்களிலும் ஒன்றாக இது இருக்கின்றது.
இந்த கார் மாடலிலேயே சிறப்பு பதிப்பு (Special Edition) ஒன்றை நிஸான் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. கெஸா (GEZA) எனும் சிறப்பு பதிப்பையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக ரூ. 7.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான நிஸான் மேக்னைட்-ஐக் காட்டிலும் மிக அதிக சிறப்பு வசதிகள் தாங்கிய ஓர் பதிப்பாக இந்த கெஸா உள்ளது. அட்வான்ஸ்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக பெர்ஃபார்மன்ஸ் திறன், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை இந்த பதிப்பில் நிஸான் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, நிஸான் நிறுவனம் இந்த காரை ஜப்பானிய தியேட்டர்களை தழுவி உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காரின் உட் பக்கம் மற்றும் மியூசிக் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளிட்டவையே ஜப்பானிய தியேட்டரை தழுவிய வசதிகளாக உள்ளன. இதன் காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையிலேயே மேக்னைட் கெஸா-வை நிஸான் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கி விட்டன. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் நிஸான் மேக்னைட் கெஸா-விற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. கடந்த மே 19இல் இருந்து புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
மேக்னைட் கெஸா சிறப்பு பதிப்பில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள்: High-Resolution திறன் கொண்ட 9 அங்குல தொடுதிரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஆன்ட்ராய்டு கார்ப்ளே ஒயர்லெஸ் இணைப்பு வசதிக் கொண்டது. இதுதவிர, பிரீமியம் தர ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஆப் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட்டுகளும் கெஸாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, வழிக்காட்டும் வசதிக் கொண்ட ரியர் கேமிரா, பழுப்பு நிற இருக்கைகள் மற்றும் காரின் பின் பக்கத்தில் சுறா துடப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த காரில் நிஸான் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இந்த அம்சங்களால் மேக்னைட் கெஸா இன்னும் அழகிய மற்றும் பிரீமியம் தர காராக மாறி இருக்கின்றது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் காராக மேக்னைட் இருந்து வருகின்றது. இதனை இரட்டிப்பாக்கும் முயற்சியாகவே இதன் வருகை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மலிவு விலைக்காக மட்டுமல்ல குறைந்த பராமரிப்பு செலவிற்காகவும் பிரபலமடைந்து காணப்படுவதாக நிஸான் தெரிவித்து உள்ளது.
ஒரு கிமீட்டருக்கு 35 பைசா மட்டுமே நிஸான் மேக்னைட்டுக்கு பராமரிப்பு செலவாகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. பாதுகாப்பு குறித்து குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு 4 நட்சத்திரங்களைக் குவித்தது.
இதன் காரணத்தினாலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, மலிவு விலை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக பாதுகாப்பு திறன் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே நிஸான் நிறுவனம் மேக்னைட்டில் கெஸா எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. நிஸான் நிறுவனம் மேக்னைட் எஸ்யூவி-யில் பன்முக பாதுகாப்பு வசதிகளை வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்களே மோதல் ஆய்வில் அக்காரை நான்கு ஸ்டார்களைப் பெற செய்திருக்கின்றது.
எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Electronic Stability Programme), டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் (Traction Control System), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (Hill Start Assist), டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System) என பலதரப்பட்ட நவீன கால பாதுகாப்பு கருவிகளும் நிஸான் மேக்னைட் காரில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் மேக்னைட் காருக்கு கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே நிறுவனத்தைத் தூக்கி பிடிக்கும் கார் மாடலாகவும் இந்தியாவில் மாறி இருக்கின்றது. இதனை புதிய மேக்னைட் கெஸா சிறப்பு பதிப்பு மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









