தீபாவளிக்கு வாங்குவதற்கு சரியான நிஸான் கார் விற்பனைக்கு வந்தாச்சு!! ஜப்பானிய ஸ்டைலில் பளபளக்குது!
நிஸான் மேக்னைட் குரோ (Nissan Magnite Kuro) ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய நிஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பிரபலமான சப் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று நிஸான் மேக்னைட் ஆகும். இந்த நிஸான் காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் 'குரோ எடிசன்' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டுள்ள புதிய மேக்னைட் குரோ எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காரின் விலை தான் இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காருக்கான முன்பதிவுகள் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதியே துவங்கப்பட்டுவிட்டது. காரின் முன்பதிவுக்கான டோக்கன் தொகையாக ரூ.11,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேக்னைட்டின் டாப்-வேரியண்ட்டான எக்ஸ்வி அடிப்படையில் இந்த ஸ்பெஷல் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய குரோ எடிசனையும் டர்போ என்ஜின் உடன் வாங்கலாம்.
அதேபோல், இந்த ஸ்பெஷல் எடிசனும் மேனுவல் & சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். காரின் பெயரில் உள்ள 'குரோ' என்பது ஜப்பானிய மொழியில் கருப்பு என்பதன் அர்த்தம் ஆகும். இதன் காரணமாகவே, புதிய மேக்னைட் குரோ எடிசன் முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டதாக உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான மேக்னைட் காருக்கும் புதிய குரோ எடிசனுக்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

காஸ்மெட்டிக் அப்டேட்களாக காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்க கிரில், ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்ஸ், அலாய் சக்கரங்கள் மற்றும் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை முற்றிலும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.
ஏற்கனவே கூறியதுபோல், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் புதிய மேக்னைட் குரோ எடிசன் கிடைக்கும். இந்த வகையில் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் கிடைக்கும் 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 72 எச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

அதுவே மற்றொரு என்ஜின் ஆப்ஷனான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மூலமாக 100 எச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். அதேநேரம் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் பெறலாம்.
360-டிகிரி அரவுண்ட் வியூ மானிடர், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வசதியுடன் மைய கன்சோல் பகுதியில் ஆர்ம்ரெஸ்ட், குரோ தீம்-இல் தரைப்பாய்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் அகலமான IRVM உள்ளிட்டவை பயணிகளின் சவுகரியத்திற்காகவும், காரின் ஸ்டைலுக்காகவும் நிஸான் மேக்னைட்டில் வழங்கப்படுகின்றன. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பிற்கு எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ள நிஸான் மேக்னைட்டிற்கு பாதுகாப்பில் 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு 2வது இன்னிங்ஸை ஏற்படுத்திக் கொடுத்துள்ள கார் மேக்னைட் ஆகும். இத்தகைய காரில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உண்மையில் சிறந்த முடிவாகும். அந்த ஸ்பெஷல் எடிசனும் சரியாக தீபாவளியை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு இருப்பது அதன் விற்பனையை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









