குரோன்னா இதான் அர்த்தமா! மாருதிக்கு எமனாக வரும் கரிகாலன்! பார்வையிலேயே எல்லாரையும் நடுங்க வைக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இதன் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) மாடல் ஒன்றை நிஸான் நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

குரோ எடிசன் (Kuro Edition) என்ற பெயரில், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனான கூட்டணியை கொண்டாடும் விதமாகவே, நிஸான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Nissan Magnite Kuro Special Edition

இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில், 2023 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை (2023 ICC Cricket World Cup) தொடர் நடைபெறுகிறது. இதற்கு நிஸான் நிறுவனம் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருக்கிறது. இதை முன்னிட்டுதான் நிஸான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிசன் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

அதற்கு முன்னதாக நிஸான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, நிஸான் மேக்னைட் குரோ எடிசன் மாடலை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் உள்ள நிஸான் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களில், மேக்னைட் குரோ எடிசன் மாடலை முன்பதிவு செய்யலாம். அத்துடன் ஆன்லைன் மூலமாகவும், அதாவது நிஸான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், மேக்னைட் குரோ எடிசன் மாடலை நீங்கள் முன்பதிவு செய்ய முடியும்.

நிஸான் மேக்னைட் குரோ எடிசன் மாடலின் விலை (Price) எவ்வளவு? என்பது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது அறிவிக்கப்படும். ஜப்பானிய மொழியில் குரோ என்றால் கருப்பு என்று பொருள். பெயருக்கு ஏற்ற வகையில், நிஸான் மேக்னைட் குரோ எடிசன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரண்டும் கருப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் காரின் XV மேனுவல், டர்போ XV மேனுவல் மற்றும் டர்போ XV சிவிடி ஆகிய வேரியண்ட்களில் (Variants), நிஸான் மேக்னைட் குரோ எடிசன் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெகுலர் மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், குரோ எடிசன் மாடலின் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகிய கார்களுடன்தான் நிஸான் மேக்னைட் கார் தற்போது போட்டியிட்டு வருகிறது.

குரோ எடிசன் மாடல் விற்பனைக்கு வந்த பிறகு, நிஸான் மேக்னைட் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என்பதால், அதன் போட்டியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படலாம். எதிர்காலத்தில் நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது நம் வாசகர்களுக்கு கூடுதல் தகவல்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 14, 2023, 23:55 [IST]
English summary
Nissan magnite kuro special edition bookings open all you need to know
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+