திடீர்ன்னு இந்த காருக்கு ரேட்டை கூட்டிய நிஸான்... ஆனா யோசிக்காம குடுக்கலாம் செம ஒர்த்!

நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காரை அப்டேட் செய்துள்ளது. இந்த அப்டேட்டில் காரின் விலை ரூ20,500 வரை அதிகரித்துள்ளது. ஆனால் பல முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

நிஸான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது பி எஸ்யூவி செக்மெண்டை இன்னும் பலப்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துடன் இந்த செக்மெண்டில் விற்பனையாகும் கிக்ஸ் காரை நிறுத்தப்போகிறது. ஏற்கனவே ஜிடி-ஆர் கார் நிறுத்தப்பட்டுவிட்டது தற்போது இந்த செக்மெண்டில் இருப்பது மேக்னைட் மட்டும் தான். இந்த மேக்னைட் காரை அப்டேட் செய்யவுள்ளது இந்த கார் 2023 மத்தியில் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

திடீர்ன்னு இந்த காருக்கு ரேட்டை கூட்டிய நிஸான்... ஆனா யோசிக்காம குடுக்கலாம் செம ஒர்த்!

அப்டேட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் கார் ரூ20,500 வரை விலையும் அதிகமாகியுள்ளது. இந்த காரில் முக்கியமாக ஆர்டிஇ கட்டுப்பாடுகளுடனான இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது போக புதிய பாதுகாப்பு அம்சங்கள் எல்லா வேரியன்ட்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட காரில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது பொறுத்திருந்து காணலாம் வாருங்கள்

2023 நிஸான் மேக்னைட்டில் வரப்போகும் மாற்றங்கள்

டிசைனை பொருத்தவரை 2023 நிஸான் மேக்னைட் காரில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படவில்லை பார்க்க அதே பழைய காரின் லுக் தான் இதிலும் இருக்கிறது. முக்கிய மாற்றமாக இதன் இன்ஜன் ரியல் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை அதிகரிக்க இந்த இன்ஜின் மாற்றமும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்த அப்டேட்டில் ஒரு நல்ல விஷயம் என்றால் நிஸான் சில பாதுகாப்பு அம்சங்களை அதன் எல்லா வேரியன்ட்களுக்கும் கொண்டு வந்துள்ளது. டிபிஎம்எஸ் (டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்), டிசிஎஸ் (டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம்), வெஹிகில் டைனமிக் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஃபங்சன், ஆகிய அம்சங்களை எல்லா வேரியன்ட்களுக்கும் வழங்கியுள்ளது.

புதிய அம்சங்களை சேர்ப்பதோட இந்த அப்டேட் நிற்கவில்லை, சில அம்சங்களை இந்த அப்டேட்டில் நீக்கியுள்ளது. மேக்னைட் காரில் வழங்கப்பட்டிருந்த எல்இடி ஃபாக் லைட்கள் தற்போது எக்ஸ்வி பிரிமியம் வேரியன்ட்டிற்கு மட்டுமே வழங்கப்படும். மற்ற வேரியன்ட்டில் இருக்காது. தற்போது உள்ள எக்ஸ்எல் என்ற மிட் ஸ்பெக் வேரியன்டில் பின்பக்கம் பார்சல் செல்ஃப் மற்றும் 4 ஸ்பீக்கர்களுக்கான 2 டிவீக்கர்கள் இருக்கும். இனி அந்த வேரியன்டில் அந்த அம்சங்கள் இருக்காது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அம்சங்களில் டிபிஎம்எஸ் (டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்) மிக முக்கியமான ஒரு அம்சமாக இருக்கிறது. இதனால் விபத்து நடப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. இந்த கார் ஏற்கனவே குலோபல் என்கேப் சோதனையில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. தற்போது டிபிஎம்எஸ் அதற்குக் கூடுதல் வலுசேர்க்கிறது. மற்றொரு முக்கியமான அம்சமாக ரியர் டிஃபாகர், வாஷர் மற்றும் வைப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் காரின் விலை ரூ20,500 வரை அதிகரிக்கப்பட்டாலும், இந்த காரில் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஃபாக்லைட், 8 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ,7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீன், 16 இன்ச் அலாய் வீல்கள், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் ரெனால்ட் நிறுவனத்துடனும் பகிர்ந்துள்ளது. இந்த இன்ஜின் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ ஆகிய வேரியன்டில் இருக்கிறது இதில் நேரச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் 71 பிஎச்பி பவரையும். 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டர்போ இன்ஜினை பொருத்தவரை 100 பிஎச்பி பவரையும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியுள்ளன. டர்போது வேரியன்டில் மட்டும் சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் சிட்ரோன் சி3, மாருதி சுஸூகி இக்னீஷ், டாடா பஞ்ச், ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 22, 2023, 9:22 [IST]
English summary
Nissan magnite price hiked after update with new safety features
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+