ரொம்ப ரொம்ப கம்மியான விலையில 7 சீட்டர் கார் ஒன்னு அறிமுகமாக போகுது... குஷியில் கூட்டு குடும்ப வாசிகள்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரை தழுவிய புதுமுக 7 சீட்டர் கார் மாடலை இந்திய சந்தைக்காக உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். இதற்கு மிக சிறந்த உதாரணமாக டொயோட்டா இன்னோவா, மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல் 6 மற்றும் ரெனால்ட் ட்ரைபர் உள்ளிட்ட சில கார் மாடல்கள் உள்ளன. இவையே அதிக இருக்கைகள் கொண்ட அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் ஆகும். அதிக உறுப்பினர்கள், கூட்டு குடும்ப வாசிகள் மத்தியிலேயே இந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மலிவு விலையில் தயாராகிறது
இந்த நிலையிலேயே பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான், வெகு விரைவில் மிக மலிவு விலையிலான ஓர் 7 சீட்டர் காரை இந்தியாவிற்காக தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையே இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் சமீபத்தில் அதன் எதிர்கால கொள்கைகள் பற்றிய தகவலை மிக சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
ரெனால்ட் டிரைபரை தழுவிய கார்
ரெனால்டின் மிகவும் பிரபலமான 7 சீட்டர் கார் மாடலான டிரைபரை தழுவி புதுமுக 7 சீட்டர் காரை நிஸான் உருவாக்கி கொண்டிருப்பது இந்த அறிவிப்பின் வாயிலாகவே தெரிய வந்திருக்கின்றது. எம்பிவி ரக காரையே நிறுவனம் தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், புதிய 7 சீட்டரானது ரெனால்ட் மற்றும் நிஸான் கூட்டணியிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது. கார் உருவாக்கம் சிஎம்எஃப்-ஏ பிளஸ் பிளாட்பாரத்திலேயே செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2023க்குள்ளேயே வந்திடும்
இந்த புதிய 7 சீட்டரின் வருகை மாருதி சுஸுகி எர்டிகா போன்ற பிற முன்னணி எம்பிவி ரக கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் துள்ளியமான வருகை நாள் மற்றும் பிற அம்சங்கள் பற்றிய விபரங்களை நிஸான் வெளியிடவில்லை. அதேவேளையில், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுவனம் புதிய அதிக இருக்கைக் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எந்த மோட்டாரை பயன்படுத்தப் போறாங்க
இதேபோல், ரெனால்ட் டிரைபரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே மோட்டாரே இதிலும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே டிரைபரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய 7 சீட்டர் டிரைபரை தழுவியதாக உருவாக்கப்பட்டாலும் அதன் தோற்றம் மேக்னைட்டை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகின்றது.

மேக்னைட்டையும் இந்த காருல பாக்கலாம்
குறிப்பாக, முகப்பு பகுதி, பக்கவாட்டு பகுதி என ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றமும் மேக்னைட் கார் மாடலை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் மேக்னைட்டை தழுவியதாகவே புதிய 7 சீட்டர் இருக்கப் போகின்றது. அதேவேளையில் ட்ரைபரை பிரதிபலிக்கும் கேபினைக் கொண்டதாகவும் புதிய 7 சீட்டர் இருக்கும். சாவியில்லாமல் நுழையும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், 2 வரிசை இருக்கைகளுக்கான ரெக்லைன், 2 மற்றும் 3 வரிசை இருக்கையாளர்களுக்கான ரூஃப் மவுண்டட் ஏசி ஆகியவை வழங்கப்பட்டிருக்கும்.
எவ்வளவு விலையில் எதிர்பார்க்கலாம்
தனியாக கழட்டும் வசதிக் கொண்ட கடைசி வரிசை இருக்கை, எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட், 8 அங்குல திரை (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது) உள்ளிட்ட அம்சங்களும் ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் நிஸானின் புதிய மேக்னைட் காரில் இடம் பெற இருக்கின்றது. இதன் விலை ரூ. 6 லட்சம் ரூ. 9 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
ஆனால், இது அதிகாரப்பூர்வ விலை அல்ல. நிறுவனம் இதுகுறித்த தகவலை காரின் அறிமுகத்தின் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிஸான் நிறுவனம் இந்த புதிய 7 சீட்டர் கார் மாடல் மட்டுமின்றி இன்னும் சில புதுமுக கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனத்தின் கடந்த கால அறிவிப்புகளின்படி ஒட்டுமொத்தமாக 3 புதிய எஸ்யூவி கார்கள் இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையிலேயே ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் இணைக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









