இவ்ளோ கம்மி விலையில 7 சீட்டர் காரானு எல்லாரும் ஆச்சரியப்பட போறாங்க! ரெண்டு குடும்பம் ஜாலியா போகலாம்!
இவ்ளோ கம்மி விலையில் 7 சீட்டர் காரா என வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு மிகக் குறைவான விலையில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
"இவ்ளோ குறைவான விலையில் 7 இருக்கைகள் கொண்ட காரா" என வாயை பிளக்கச் செய்யும் அளவிற்குக் மலிவு விலையில் ஓர் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ரொம்ப ரொம்ப கம்மியான விலையில் புதுமுக வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தகவல் அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. நிஸான் நிறுவனமே குறைவான விலையில் 7 சீட்டர் காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரின் வருகை பற்றிய தகவல் அரசல்புரசலாக வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இப்போது உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டிற்குள் அது விற்பனைக்கு வர இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. ஆமாங்க, நடப்பாண்டு முடிவதற்குள் நிஸான் நிறுவனத்தின் மலிவு விலை 7 சீட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது. இப்போது, நிறுவனத்தின்கீழ் மேக்னைட் எனும் ஒற்றை கார் மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் வரிசையிலேயே 7 சீட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் நிஸான் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதுவும் இப்போதைய மேக்னைட் காரைபோல் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரெனால்ட் ட்ரைபரை போலவே இதுவும் விலை குறைவானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், என்ன ரகத்தில் அது இருக்கும் என்பது தெரியவில்லை. எஸ்யூவி (SUV) அல்லது எம்பிவி (MPV) என இரண்டில் ஏதாவது ஒன்றாக அது இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், இப்போது சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா உள்ளிட்டவற்றிற்கு போட்டி அளிக்கும் வகையில் எஸ்யூவி ரக காராக அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையில் அதிகம் இருக்கைகள் கொண்ட கார்களுக்கு நல்ல டிமாண்ட் உண்டு.
ஆகையால், நிஸான் நிறுவனத்தின் புதுமுக காருக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கார் நிஸானின் மேக்னைட் காரை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், கவர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத வாகனமாக நிறுவனத்தின் புதுமுக எஸ்யூவி கார் இருக்கும் என யூகிக்க முடிகின்றது.
அழகான தோற்றம் கொண்ட மலிவு விலை எஸ்யூவி ரக காரே மேக்னைட் ஆகும். இந்த காரின் ஆரம்ப விலையே ரூ.5,99,900 மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இப்போது இந்த காரை வாங்க நினைப்பவர்களுக்கு ரூ.62 ஆயிரம் வரை சிறப்பு சலுகை வழங்க இருப்பதாக நிஸான் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பு சலுகைகளுடனேயே நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் விற்பனைக்கு விரைவில் வர இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மலிவு விலை கார் மாடல்களான டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால் நிஸானின் புதுமுக காருக்கும் அமோக டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்கிற விபரம் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








