நாங்களும் ஜப்பான் கார் பிராண்ட் தான்!! நிஸான் இந்தியாவில் களமிறக்க போகும் கார் ஒவ்வொன்னும் பயங்கரமா இருக்கு!
நிஸான் (Nissan), ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் சுஸுகி, டொயோட்டா என சில ஜப்பான் கார் நிறுவனங்கள் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருந்தாலும், ஹோண்டா, நிஸான் போன்ற நிறுவனங்கள் இன்னமும் போராடிக் கொண்டுத்தான் இருக்கின்றன. டட்சன் என்ற மற்றொரு ஜப்பானிய கார் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவை விட்டு நடையைக்கட்டி விட்டது.
நிஸான் நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவர 5 புதிய கார்களை வரிசையில் வைத்துள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், இந்த புதிய நிஸான் கார்கள் தோற்றத்திலும், செயல்படு திறனிலும் எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்: நிஸான் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு ஓரளவிற்கு விற்பனையாகக்கூடிய கார் என்றால் அது மேக்னைட் தான். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் வருகிற 2024இல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் கணிசமான எண்ணிக்கையில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால், இடதுகை-டிரைவ் மேக்னைட் காரும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்படலாம்.
ரெனால்ட் டஸ்டர் அடிப்படையிலான எஸ்யூவி: மேக்னைட்டை காட்டிலும் அளவில் பெரியதாக மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு கொண்டுவரவும் நிஸான் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் எஸ்யூவி காரின் அடிப்படையில் இருக்கும் என கூறப்படுகிறது. ரெனால்ட்டும், நிஸானும் கூட்டணியில் இருப்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

7-சீட்டர் எஸ்யூவி: மேலே கூறிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும். அதேபோன்று, க்ரெட்டாவின் 7-சீட்டர் வெர்சனான அல்கஸார் காருக்கு போட்டியாகவும் ஒரு 7-சீட்டர் எஸ்யூவி காரை கொண்டுவரும் திட்டத்தில் நிஸான் உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனால்ட் டிரைபர் அடிப்படையிலான எம்பிவி: ரெனால்ட் நிறுவனத்தை காப்பியடித்து நிஸான் உருவாக்கும் மற்றொரு காராக இந்த எம்பிவி இருக்கும். டிரைபர் காரில் உள்ளதை போன்று, 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்டதாக இந்த புதிய நிஸான் கார் இருக்கும். அளவில் பெரிய காராக இருக்கும் என கூறப்பட்டாலும், மேக்னைட்டை விட விலை குறைவானதாக இந்த எம்பிவி கார் இருக்கலாம்.

எண்ட்ரீ-லெவல் இவி: சந்தையில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வருவது அதிகரித்து வருவதால், நிஸானும் இன்னும் சில வருடங்களில் இந்த பந்தயத்தில் இணையும். பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய விலையில் எண்ட்ரீ-லெவல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை முதலாவதாக ரெனால்ட் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எக்ஸ்-டிரைல்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கார்கள் சற்று தாமதமாகினாலும் அடுத்தடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால், எக்ஸ்-டிரைல் காரை இந்தியாவில் நிஸான் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவே என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த லிஸ்ட்டில் எக்ஸ்-டிரைலை பார்ப்பதற்கு காரணம், இந்த காரை சமீபத்தில்தான் நிஸான் இந்தியாவில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்து இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட் டிரெண்டிற்கு ஏற்ப எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவர நிஸான் நினைப்பது புத்திசாலித்தனமான முடிவு. ஆனால், ரெனால்ட் கார்களை அடிப்படையாக கொண்டு புது கார்களை உருவாக்க நினைத்திருப்பதுதான் சற்று தொங்கலாக உள்ளது. இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட ரெனால்ட் கார்கள் டஸ்டர் மற்றும் டிரைபர் என்பதால், நிஸான் எடுக்கப்போகும் முடிவு சரியானதாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Autocar India


Click it and Unblock the Notifications









